‘சிங்கிள் டோஸ் மட்டும் போதும்’... ‘மத்தது மாதிரி இது இல்ல’... ‘புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு’... ‘விஞ்ஞானிகள் அளித்த ஆச்சரிய தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்தினாலே போதும் என்ற நிலையில், கொரோனா தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் ஃபைச்ர் மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனாவை தடுப்பதற்காக இப்போது உருவாக்கி, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படுகிற தடுப்பூசிகள் பலவும் இரட்டை ‘டோஸ்’ தடுப்பூசிகள் ஆகும். அதாவது இந்த தடுப்பூசியை ஒரு முறை போட்டு பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மறுமுறையும் போட வேண்டும். இதனால் ஒருவர் 2 முறை தடுப்பூசி போட நேரிடும்.

ஆனால் தற்போது பெல்ஜியம் நாட்டின் கே.யு.லுவனில் உள்ள ரெகா நிறுவனத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியின் அடைப்படையில் கொரோனாவுக்கு ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசின் மேற்பரப்பில் உள்ள ‘ஸ்பைக் புரோட்டின்’ மரபணு வரிசையை மஞ்சள்காய்ச்சல் தடுப்பூசியில் செலுத்தி, இந்த தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசிக்கு ‘ரெகாவேக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் ஒரு ‘டோஸ்’ அளவை வெள்ளெலிகள் மற்றும் குரங்குகளுக்கு செலுத்தி சோதித்ததில் அது கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பது தெரிய வந்துள்ளது.

அடுத்த கட்டமாக இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைக்கு விஞ்ஞானிகள் தயாராகி வருகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஃபைசர் போன்று மைனஸ் 70 டிகிரி குளிர்நிலையில் வைக்காமல், சாதரணமாக 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் தன்மையிலேயே இந்த தடுப்பூசியை பாதுகாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்