எலான் மஸ்க்குக்கே Tough கொடுக்கும் 20 வயது இளைஞர்.. இப்போ இப்படி வேற ஒரு கண்டீஷனா..?இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான  எலான் மஸ்க்கின் ஜெட் விமானம் குறித்த தகவல்களை வெளியிட்டுவந்த இளைஞர் தற்போது புதிய கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

Advertising
>
Advertising

எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

டிராக்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஜாக் ஸ்வீனி என்னும் மாணவர் எலான் மஸ்க்கின் ஜெட் விமானத்தின் இயக்கம் குறித்த தகவல்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உலகையே திகைப்படைய செய்தார். அதாவது, மஸ்கின் Falcon 900B ஜெட் தற்போது எங்கே இருக்கிறது? அடுத்து எங்கே செல்லும்? எந்த விமான நிலையத்தில் எத்தனை மணி நேரம் நிற்கும் என அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இந்த விஷயத்தை அறிந்த மஸ்க், இந்த தகவல்களை நீக்குமாறு ஜாக்கிற்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். ட்விட்டரில் இருந்து தன்னுடைய ஜெட் விமானம் குறித்த தகவல்களை நீக்க, 5000 அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும் மஸ்க் தனது மெசேஜில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஜாக் வைத்த கோரிக்கை வேறுவிதமாக இருந்தது. எலான் மஸ்கிடம் 3 கோரிக்கைகளை வைத்திருந்தார் 19 வயதான ஜாக். தனக்கு 50,000 டாலர்கள் வழங்கவேண்டும். அவரது நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப் பயில வாய்ப்பு வழங்கவேண்டும் அல்லது டெஸ்லா காரை வழங்க வேண்டும் என டீல் பேசியிருக்கிறார் ஜாக்.

பிரைவேட் ஜெட்

இந்நிலையில், தற்போது இதுகுறித்து பேசியிருக்கிறார் ஜாக். அதில்,"அவருடன் (மஸ்க்) அவருடைய பிரைவேட் ஜெட்டில் பயணிக்க அவர் என்னை அனுமதித்தால் இந்த செயல்பாடுகளை நான் நிறுத்திக்கொள்கிறேன். எனக்கு அந்த 50 ஆயிரம் டாலர்களும் வேண்டாம். ஆனால் இது விவாதத்திற்குரியது" எனத் தெரிவித்துள்ளார். இது இணையவெளிகளில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

ELONMUSK, JACK SWEENEY, எலான் மஸ்க், ஜாக் ஸ்வீனி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்