'6-வது மாடி பால்கனி நுனியில்’... ‘தலைகீழாக யோகா போஸ்’... 'கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

யோகா செய்வதற்காக 80 அடி உயரக் கட்டிட விளிம்பில், தலைகீழாகத் தொங்கிய கல்லூரி மாணவி, நழுவி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'6-வது மாடி பால்கனி நுனியில்’... ‘தலைகீழாக யோகா போஸ்’... 'கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்'!

மெக்சிகோவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருபவர், 23 வயது இளம்பெண் அலெக்ஸா தெரசா. இவர், 6-வது தளத்தில் உள்ள தமது அறையின் பால்கனியில் யோகா பயிற்சி மேற்கொண்டார். கடினமான யோகாவை செய்யப் போவதாகக் கூறி, கைப்பிடி விளிம்பில் தலைகீழாகத் தொங்கிய அவர், பிடி நழுவி 80 அடி உயர பால்கனியிலிருந்து கீழே விழுந்தார். இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அலெக்ஸா தெரசா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தலைகீழாக விழுந்த தெரசாவின் உடலில் 110 எலும்புகள் உடைந்துள்ளன. இரு கால்கள், முதுகு, இடுப்பு, தலை என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெறும் அவருக்கு பெற்றோர் கோரிக்கையின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்க முன்வந்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அலெக்ஸா விழுவதற்கு சற்று முன், அவரது தோழி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

YOGA, POSE, FALLS

மற்ற செய்திகள்