'40 நகரங்களுக்கு' மேல் பரவிய 'வன்முறை...' போராட்டக்காரர்களை 'சீண்டிய ட்ரம்ப்...' கடைசியில் 'பதுங்குகுழிக்குள்' பதுங்கிய 'சோகம்...'

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வெள்ளை மாளிகை போராட்டங்களின் போது டொனால்ட் டிரம்ப் நிலத்தடி பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாதுக்காக்கபட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

'40 நகரங்களுக்கு' மேல் பரவிய 'வன்முறை...' போராட்டக்காரர்களை 'சீண்டிய ட்ரம்ப்...' கடைசியில் 'பதுங்குகுழிக்குள்' பதுங்கிய 'சோகம்...'
Advertising
Advertising

அமெரிக்காவின் மின்னபொலிஸ்  நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தால் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.

அமெரிக்கா முழுவதும் 40 நகரங்களுக்கு மேல் கலவரம் பரவி உள்ளது. பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். தடுப்புகளைத் தாண்டி முன்னேறிய அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் பாதுகாப்பு கருதி வெள்ளை மாளிகை முன் ராணுவ கவச வாகனங்கள், டேங்குகள் போன்றவை நிறத்தப்பட்டன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் நிலத்தடி பதுங்கு குழிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மெலனியா டிரம்ப் மற்றும் பரோன் டிரம்ப் ஆகியோரும் அவருடன் அழைத்துச் செல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்