'அதிர்ச்சியில் உறைந்த மக்கள்'...'இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்'... சுனாமி எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்தோனேசியாவின் மொலுக்காஸ் பகுதியையொட்டிய கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நேற்றிரவு 9.47 மணிக்கு இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பதிவாகியிருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் மனாடோ என்ற நகரில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் உணரப்பட்டது. மேலும் சுலாவசி என்ற தீவிலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் உணரப்பட்டது.
இதனிடையே இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால், சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்தோனேசிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவையும் விட்டு வைக்கவில்லை. அங்கு 5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெடித்துப் பிளந்த சாலைகள்'.. கலங்கடிக்கும் உயிர் பலி.. பதற வைத்த நிலநடுக்கம்!
- ‘பப்ளிக்' இடத்துல இப்டிலாம் செய்யலாமா?... ‘காதல் ஜோடிகளுக்கு நிகழ்ந்த சோகம்’... அதிரவைத்த தண்டனை!
- ‘சிங்கிள்ஸ் கொஞ்சம் நோட் பண்ணிக்கோங்க’.. ‘ஒரே மேடையில் இரு பெண்களை திருமணம் செய்த இளைஞர்’.. வைரலாகும் வீடியோ..!
- 'பணம் வெச்சிருந்தா.? .. இப்படி பண்றது சரியா?'.. இந்திய குடும்பத்தினர் செய்த காரியம்.. வீடியோ!
- ஜகார்த்தாவில் பாதி கடலில் மூழ்கியதால்... தலைநகரை மாற்ற ரெடியாகும் இந்தோனேஷியா!
- ஒரே கட்டமாகத் தேர்தல்.. தேர்தல் பணிச்சுமையால் நிகழ்ந்த சோகம்.. 272 தேர்தல் அலுவலர்கள் பலி!
- நடமாடும் நூலகமான ஷேர் ஆட்டோ... வாசிப்பை ஊக்குவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்!
- பிரேக்-அப்புக்கு பேனர் வைத்த மகா பிரபு இவர்தான்.. வைரலாகும் புகைப்படங்கள்!