'சரிப்பா, லிஸ்ட் சொல்றேன் எழுதிக்கோங்க'... 'தப்பு பண்றவங்களுக்கு என்னென்ன தண்டனை'... 'கேட்கும் போதே அலறுதே'... தாலிபான்கள் அதிரடி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆப்கானிஸ்தானில் தவறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பதைத் தாலிபான்கள் பட்டியல் போட்டுள்ளார்கள்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், மீண்டும் அவர்களின் பழைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். பெண்கள் வேலைக்கு வரக்கூடாது, ஆண்களோடு சேர்ந்து கல்லூரியில் அமரக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன தண்டனை வழங்கினார்களோ தற்போது அதே தண்டனையை மீண்டும் வழங்க முடிவு செய்துள்ளார்கள்.

குறிப்பாகப் பெரிய விளையாட்டுத் திடல்கள், மசூதிகள் அருகிலுள்ள மைதானங்களில் வைத்து, கைகளை வெட்டுதல், தூக்கில் போடுதல்  முதலான கொடூர தண்டனைகளைத் தாலிபான்கள் அளித்ததை உலகமே அறியும். தற்போது மீண்டும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், பழைய தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும் எனத் தாலிபான் அமைப்பின் நிறுவனரான Mullah Nooruddin Turabi என்பவர் தெரிவித்துள்ளார்.

முன்பு தாலிபான்கள் ஆண்டபோது இஸ்லாமியச் சட்டத்தின்படி கடுமையான தண்டனைகளைச் செயல்படுத்தியவர் Turabi. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மைதானங்களில் வைத்து நாங்கள் கொடுக்கும் தண்டனைகளைப் பிற நாட்டினர் விமர்சித்தார்கள். சட்டம் எப்படி இருக்க வேண்டும் என அவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குரானின்படி எங்கள் சட்டங்களை நாங்கள் உருவாக்கிக் கொள்வோம்'' எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

தாலிபான்களின் சட்டப்படி, கொலை செய்தவர்களிடம் இருந்து இரத்தப் பணம் என்னும் ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு அவனை விட்டுவிடுவார்கள். அல்லது கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தால் மக்கள் முன்பு தலையில் ஒரே முறை சுடப்பட்டுக் கொல்லப்படுவார்கள். திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் கைகள் வெட்டப்படும். இவ்வாறு பல கொடூரமான தண்டனைகளைத் தாலிபான்கள் அளித்து வந்துள்ளார்கள்.

இதற்கிடையே தாலிபான்கள் மீண்டும் ஆப்கானைக் கைப்பற்றியுள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் கொடிய தண்டனைகளை வழங்கிய Turabiக்கு இப்போதும் ஆட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அவர் முன்பு தாலிபான்களால் வழங்கப்பட்ட அதே தண்டனைகள் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்