ராணி எலிசபெத்-க்கு அஞ்சலி செலுத்த காத்திருந்த இருவர்.. 14 மணி நேரத்துல லவ்வர்ஸ் ஆகிட்டாங்களா..? ஒரே நாளில் வைரல் ஆன டாப்பிக்
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.
கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, இத்தனை நாட்கள் அரசு மரியாதை படி, ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நபர்கள் இடையே நடந்த நிகழ்வு தொடர்பான செய்தி, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொது மக்கள் பலரும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த நிலையில், Jack Ciuro மற்றும் Zoe ஆகிய இருவர் இடையே ஏற்பட்ட நட்பு தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
முன்பின் தெரியாத ஜாக் மற்றும் ஜோ ஆகிய இருவரும் சுமார் ஐந்து மைல் தூரத்திற்கு ராணிக்கு அஞ்சலி செலுத்த காத்திருந்துள்ளனர். ஏறக்குறைய 14 மணி நேரம் வரிசையில் காத்திருந்த அவர்கள், ஒரு நிமிடம் கூட துவண்டு போகாமல் முழுக்க முழுக்க அரட்டை அடித்த படி, மிகவும் வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், இருவருக்கும் இடையே நிறைய பொதுவான விஷயங்கள் ஒத்து போவதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இது தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், பலரும் இவர்களுக்கு இடையே காதல் உருவாகி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், நல்ல நண்பர்களாக மாறிய ஜாக் மற்றும் ஜோ ஆகிய இருவருக்குமே ஏற்கனவே பார்ட்னர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில், அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள போகும் ஜோ, ஜாக்கை தனது திருமணத்திற்காக அழைத்துள்ளார்.
ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருந்து இனி வரும் காலங்களில் நண்பர்களாக இருக்க போவதாக அறிவித்துள்ள அவர்கள், தங்களுக்கு இடையே காதல் உருவானதாக வரும் கருத்துக்களை பார்த்து அதனை மிகவும் வேடிக்கையாக அவர்கள் எதிர் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Also Read | இதுவரை யாரும் கண்டிராத ராணி எலிசபெத் புகைப்படம்.. பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இறுதி கணத்தில் அம்மாவின் சவப்பெட்டி மீது அரசர் சார்லஸ் வைத்த கடிதம்.. அதுல இருந்ததை படிச்சிட்டு கண்கலங்கிய பொதுமக்கள்..!
- நல்லடக்கம் செய்யப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்.. இறுதி கணத்தில் நடைபெற்ற வித்தியாசமான அரச சடங்கு..!
- எங்கேயுமே இங்கிலாந்து ராணியின் கர்ப்பகால புகைப்படங்களை பார்க்க முடியாது.. வரலாற்றில் நடந்த வினோதம்.. இதுதான் காரணம்..!
- இங்கிலாந்து ராணியின் சவப்பெட்டி மீது போர்த்தப்பட்ட வித்தியாசமான கொடி.. அதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா..?
- அடுத்த 90 வருசத்துக்கு சீல்.. ராணி எலிசபெத் உயில் குறித்து வெளியான ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!
- ராணி எலிசபெத்துக்காக.. 30 வருஷம் முன்னாடியே தயாரான சவப்பெட்டி.. "அதுக்குள்ள இத்தன விஷயம் வேற இருக்கா?"
- Queen Elizabeth: "ராணி எலிசபெத் சென்னை வந்துட்டாங்க.. விருந்து ரெடி.. திடீர்னு போனில் வந்த உலுக்கும் செய்தி.. அப்பவும் செஃப் செய்த நெகிழ்ச்சி காரியம்.. CWC வெங்கடேஷ் பட் ஷேரிங்ஸ்!!
- ராணி எலிசபெத் மறைவு பத்தி.. பல மாதங்கள் முன்பே கணிப்பு.. உலகமே தேடும் இளம் பெண்.. "யாரு தாயி நீ??"
- ராணி எலிசபெத் எழுதிய 'கடிதம்'.. "இன்னும் 63 வருசத்துக்கு யாராலயும் படிக்கவே முடியாது".. அப்படி என்ன கத பின்னாடி இருக்கு??
- "அட, இதுவா இம்புட்டு லட்ச ரூபா'க்கு ஏலம் போச்சு??".. ராணி எலிசபெத் Use செய்த பொருள்.. விலை'ய கேட்டா தலையே சுத்தும்!!