பிரிட்டன் சாலையில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்.. அரண்டு போன அக்கம் பக்கத்தினர்.!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் சாலையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி அனைவரையும் பதைபதைக்க வைத்திருக்கிறது.
Also Read | பல வருஷ காதல்.. திருமணத்திற்கு முன் காதலி செய்த விஷயம்.. மனம் பொறுக்காமல் இளைஞர் எடுத்த முடிவு
பொதுவாகவே சாலையில் பெண்கள் தனியாக நடந்து செல்லும் போது பலவிதமான இன்னல்களை எதிர்கொள்கின்றனர். முன்பின் தெரியாதவர்களின் சீண்டல் உள்ளிட்டவற்றை நேரடியாக எதிர்கொள்ளும்போது பெண்கள் அவர்களை நேருக்கு நேராக எதிர்கொண்டு விடுகின்றனர். ஆனால் அதன் பின்னும் உண்டாகும் விளைவு சில சமயங்களில் இன்னும் மோசமாகவே இருக்கிறது. அப்படிதான் வழியில் சென்ற மர்ம நபரொருவர் பெண்மணி ஒருவரை தாக்கியிருக்கும் சம்பவம் அவரை மரணம் வரை கொண்டு சென்றிருக்கிறது.
லண்டன் Cranbrook சாலை அருகே உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்த Zara Aleena, 35 எனும் பெண்ணை திடீரென அந்த பக்கம் வந்தவர்கள் கவனித்துள்ளனர். பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார் .
இதுகுறித்து விசாரிக்கும் பொழுது, அந்த பெண் யாரோ ஒரு சந்தர்ப்பவாத முகமறியா நபரால் தாக்கப்பட்டு உயிர் இழந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றனர் அப்பகுதியினர். ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாய் Zara Aleena உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது, அக்கம் பக்கத்தினர் அவரை சாலையில் கண்டதும், அவரை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். ஆனாலும் அவருக்கு சிகிச்சைகள் நல்ல முறையில் வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் Stuart Bell ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் சந்தர்ப்பவாத நபரால் Zara Aleena தாக்கப்பட்டதாகவும், Zara Aleena மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தியதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 29 வயது மதிக்கத்தக்க சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த பெண்ணின் பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை தெரிந்து வைத்துள்ளதாகவும், அதை வைத்து அவரை மேலும் விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்ற செய்திகள்