'வேகமெடுக்கும் டெல்டா வைரஸ்'... 'தயவு செஞ்சு இத உடனே நிறுத்துங்க'... உலக சுகாதார நிறுவனம் !

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் வேற்றுருவாக்கம்  அடைந்து இப்போது டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

'வேகமெடுக்கும் டெல்டா வைரஸ்'... 'தயவு செஞ்சு இத உடனே நிறுத்துங்க'... உலக சுகாதார நிறுவனம் !

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அது வேற்றுருவாக்கங்கம்  அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் வைரஸ்களாக புதிய ரூபத்தில் உலகை அச்சுறுத்தி வருகிறது. டெல்டா வைரஸ் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதாலும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களைக்கூடப் பாதிக்கலாம் என்பதாலும் வளர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு பூஸ்டர் டோஸாக மூன்றாவது டோஸ் செலுத்தி வருகின்றன.

Stop Booster (Third) Shots For Delta Variant, Says WHO

இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேஸஸ், "உலக நாடுகள் தங்கள் மக்களின் உயிரைப் பாதுகாக்கக் காட்டும் ஆர்வத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரத்தில் தடுப்பூசி மொத்த உற்பத்தியில் ஏற்கெனவே மிக அதிகமான டோஸ்களைப் பயன்படுத்திவிட்ட வளர்ந்த நாடுகள் இன்னும் அதிகமாக இதனைப் பயன்படுத்த நினைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

பெரும்பாலான தடுப்பூசி அதிக வருவாய் ஈட்டும் நாடுகளுக்குச் செல்வதை மாற்றி, தடுப்பூசிகள் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்ய வேண்டும்'' என அதோனோம் கூறியுள்ளார். ஜெர்மனி அரசு வரும் செப்டம்பர் மாதம் முதல் தொற்றுக்கு வாய்ப்புள்ள மக்களுக்கு பூஸ்டர் டோஸ் போடவிருப்பதாகத் தெரிவித்தது. இரண்டாவது டோஸ் முடிந்து மூன்று மாதங்கள் ஆனவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டது.

இந்த சூழ்நிலையில் தான், தடுப்பூசி வழங்கலில் நிலவும் ஏற்றத்தாழ்வைச் சீராக்கும் வகையில், டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது டோஸ் வழங்குவதை நிறுத்தங்கள் என வளர்ந்த நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்