ஆப்பிள் கம்பெனிக்கே அஸ்திவாரம் அதுதான்... ஏலத்துக்கு வரும் ஸ்டீவ் ஜாப்ஸின் பொக்கிஷம்.. கடும் போட்டி இருக்குமாம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் முதன் முதலில் உருவாக்கிய ஆப்பிள்-1 கணினியின் மாதிரி வடிவமைப்பு (prototype) ஏலத்துக்கு வந்திருக்கிறது. இது கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனையாகலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
வெற்றிப்பயணம்
டெக்னாலஜி உலகில் ஜாம்பவானாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தை 1970களில் தனது நண்பர் ஸ்டீவ் வோசினியாக்-உடன் இணைந்து துவங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில்நுட்பத்தின் மீது தீரா காதல் கொண்டவரான ஸ்டீவ் ஜாப்ஸ் ஒவ்வொரு வீட்டிலும் கணினியை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற லட்சிய கனவில் லயித்திருந்த நேரம். ஆப்பிள் என்ற சிறிய நிறுவனம் கணினிகளை உருவாக்கும் பணியில் துடிப்புடன் ஈடுபடத்துவங்குகிறது. அப்போது தனது நண்பர் ஸ்டீவ் வோசினியாக்-உடன் இணைந்து புதிய ஆப்பிள் -1 கணினிக்கான முன்மாதிரி வடிவமைப்பை உருவாக்குகிறார் ஜாப்ஸ்.
அதன்பின்னர் 1976 ஆம் ஆண்டு இந்த முன்மாதிரி வடிவத்தை தனிநபர் கணினி கடை உரிமையாளர் பால் டெரெல் என்பவரிடம் ஜாப்ஸ் காட்டியிருக்கிறார். இந்த முன்மாதிரி வடிவத்தை கண்டு ஆச்சர்யப்பட்ட பால், ஆப்பிள் என்னும் புதிய நிறுவனத்துக்கு பிசினஸ் வாய்ப்பை வழங்குகிறார். அதன்பிறகு நடந்தது அனைத்தையும் இந்த உலகம் நன்றாகவே அறியும். தொட்டதை எல்லாம் ஜெயித்துக் காட்டினார் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் தவிர்க்க முடியாத உயரத்துக்கு சென்றது.
அஸ்திவாரம்
அப்படி ஆப்பிள் என்ற நிறுவனத்துக்கே அஸ்திவாரமாக அமைந்த இந்த ஆப்பிள் -1 கணினியின் முன்மாதிரி தான் இப்போது ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதனை பாஸ்டனை சேர்ந்த ஆர்ஆர் நிறுவனம் நடத்துகிறது. இதுவரையில் 278,005 அமெரிக்க டாலர்களுக்கு இந்த முன்மாதிரி வடிவமைப்பு ஏலம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்த ஏலம் ஆகஸ்டு 18 ஆம் தேதிவரையில் நடைபெறும் என்பதால் இன்னும் அதிக விலைக்கு இது விற்பனையாகலாம் என எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆர்ஆர் ஏல நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் பாபி லிவிங்ஸ்டன் இதுபற்றி பேசுகையில்,"இந்த போர்டு இல்லாமல் ஆப்பிள்-1 இல்லை. இது ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆப்பிள் நினைவுச்சின்னங்களில் ஒன்று" என்றார். முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஆப்பிள் -1 கணினியை இதே ஆர்ஆர் நிறுவனம் ஏலத்திற்கு கொண்டுவந்தது. அதனை 375,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒருவர் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஏலத்துக்கு வந்த முகமது அலியின் சாம்பியன்ஷிப் பெல்ட்.. சூடுபிடிச்ச ஏலம்.. யம்மாடி இவ்வளவு கோடியா.. அப்படி என்ன இருக்கு அதுல.?
- "1 KG டீ தூள் விலை இவ்ளோ ரூபாவா..?" .. அப்படி என்னங்க இதுல ஸ்பெஷல்??
- உலக வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன கார் இதுதான்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?
- ஒரு sandwich-காக பெயிண்டிங்கை கொடுத்த ஓவியர்.. ஏலத்துல நடந்த அதிசயம்.. ஹோட்டல் ஓனருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..!
- நூற்றாண்டோட பெஸ்ட் கோல் அடிச்சப்போ மாரடோனா போட்ருந்த டிஷர்ட்.. ஏல வரலாற்றில் புதிய சாதனை.. ஆத்தாடி இவ்வளவு கோடியா?
- முக்கியமான மேட்ச்ல மாரடோனா போட்ருந்த டிஷர்ட் ஏலம்..ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா?
- இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கு வந்ததில்லை.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா.. விற்பனையாளர்களின் BP-யை எகிறவைக்கும் வெள்ளை நிற வைரம்..!
- 2.2 கோடிக்கு ஏலம்போன பிரபல ராப் பாடகரின் லவ் லெட்டர்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!
- கண்ணீருடன் ஏலத்துக்கு வந்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு உடைந்துபோன அதிகாரிகள்..!
- இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கே வந்தது இல்லயாம்.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா..!