'ஸ்டீவ் ஜாப்ஸா'?...இல்ல 'ஸ்டீவ் நோ ஜாப்ஸா'?... 'வைரலாகும் போட்டோ'... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தொழில்துறையில் சாதிக்க வேண்டும் என்றால் அதற்கு நிச்சயம் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்கை உதாரணமாக
இருக்கும் என பலரும் கூறுவது உண்டு.
தொழில்நுட்ப சாதனங்களில் முன்னோடியாக திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் தந்தை என்றே ஸ்டீவ் ஜாப்ஸை கூறலாம். சிறந்த நிர்வாகி மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்திற்கு அடித்தளமாய் அமைந்த அவர், தனது 56வது வயதில் கடந்த 2011ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு புகைப்படம், மீண்டும் அவர் குறித்த விவாதத்திற்கு தொடக்க புள்ளியாக அமைந்துள்ளது.
எகிப்தில் எடுக்கப்பட்ட ஒருவரின் புகைப்படம் கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் போலவே இருந்தது. உடனடியாக அதனை பகிர்ந்த பலரும் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழக்கவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என பதிவிட்டனர். அதற்கு சில ஆதாரங்களையும் அவர்கள் கூறினர். ஸ்டீவ் ஜாப்ஸ் ஷூ அணிய விரும்ப மாட்டார். சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் உள்ள நபரும் ஷூ அணியவில்லை என்று தெரிவித்தனர்.
மேலும் அவர் கையில் ஆப்பிள் கடிகாரம் அணியவில்லை எனவே இவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என நகைச்சுவையாக தெரிவித்தனர். இதற்கிடையே இன்னும் சிலர் அவர் ஸ்டீவ் ஜாப்ஸா அல்லது ஸ்டீவ் நோ ஜாப்ஸா எனவும் நக்கலாக கிண்டலடித்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பேட்டரி சூடாகி தீப்பிடிக்கும் அபாயம்’... ‘அதனால இந்த லேப்டாப் மட்டும்’... ‘விமானங்களில் எடுத்து செல்ல தடை’!
- ‘வாட்ஸ்அப்பில்’ புதிதாக வரவுள்ள ஆப்பிளின் ‘ஃபன் ஃபீட்சர்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- 'பேங்க் ஆஃபீசர் வேலைன்னு நம்பி போனோம்'...'இப்போ எல்லாம் போச்சு'...சென்னை இளைஞர்கள் பரிதாபம்!
- '1700' பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு?'...'சென்னை ஊழியர்களின் நிலை?'... பிரபல நிறுவனம் அதிரடி!
- ‘இது என்ன புதுசால்ல இருக்கு..!' 'இப்படி எல்லாம் கூடவா வேல கேப்பாங்க..?’
- 18 வருடம் பழசு.. ஆனால் ஐ-பாட் விலையோ ரூ.14 லட்சம்.. இதுதான் காரணம்!
- ‘ஆப் சொல்றத வெச்சி எப்படி கைது பண்லாம்.. எடுங்க ரூ.7 ஆயிரம் கோடி’.. ஆப்பிள் மீது இளைஞர் வழக்கு!
- 50 லட்சம் பேர் வேலை இழப்பு.. பணமதிப்பிழப்பு காரணமா?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
- டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
- 'தவறான பாஸ்வேர்டால் முடங்கிய 'ஐ-பேட்'...'ஆத்தாடி' சரியாக இவ்வளவு வருஷம் ஆகுமா?