ஆஹா, இது லிஸ்ட்லேயே இல்லையே .. ரஜினி பட ஸ்டைலில் கச்சிதமா முடித்த ரோபோ.. உலகிலேயே இதுதான் முதல் முறையாம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நவீன தொழில்நுட்ப உலகில் மனிதனை விட துரிதமாகவும் தெளிவாகவும் அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது ரோபோக்கள். அனைத்து துறைகளிலும் மனிதனை விட பல சாதனைகளை படைத்துவரும் ரோபோ மருத்துவத்துறையில் செய்யும் பல அறிய செயல்கள் வினோதமாகவே உள்ளது. ரோபோகள் மருத்துவர்களால் செய்ய முடியாத பல செயல்களை நொடிப் பொழுதில் செய்து முடித்து விடுகிறது.

Advertising
>
Advertising

அந்தவகையில்,  ரோபோ ஒன்று பன்றிக்கு வெற்றிகரமாக கீ-ஹோல் அறுவை சிகிச்சை செய்து முடித்து மருத்துவர்களை பிரமிக்க வைத்துள்ளது. The Smart Tissue Autonomous Robot என்று அழைக்கப்படும் ரோபோவானது நான்கு பன்றிகளில் குடலின் இரண்டு முனைகளை இணைக்க லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.  இவ்வாறான அறுவை சிகிச்சைகளை செய்ய துல்லியமான அடுத்தடுத்த இயக்கங்கள் தேவைப்படுகின்றன.

இதனை செய்த ரோபோ மனிதர்களை விட மிக கச்சிதாமாக செய்து முடித்திருப்பதாக அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆக்செல் க்ரீகர், மனித உதவியின்றி ஒரு ரோபோ லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல்முறை என்று தெரிவித்தார்.  ஸ்டார் ரோபோவானது  நான்கு பன்றிகளின் குடல்களை மிகவும் வேகமாகவும் , துல்லியமாக கணித்து சிகிச்சையை செய்து முடித்துவிட்டது.

குடலின் இரண்டு முனைகளை இணைப்பது என்பது இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் ஒரு சவாலான செயல் முறை.  ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் கவனத்துடன் துல்லியம் நிலை தடுமாறாமல் தையல்கள் போடவேண்டும்.  ஒரு சிறிய கை நடுக்கம் அல்லது தவறான தையல் இரத்த கசிவுகளை ஏற்படுத்தும். இது நோயாளிக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உதவி பேராசிரியர் க்ரீகர்  ஸ்டார் ரோபோவை உருவாக்க கடினமாக உழைத்துள்ளார்.  ரோபோ தன்னிச்சையாக செயல்பட்டாலும் , உடலை கீறுவது போன்ற  மென் - திசு அறுசை சிகிச்சையை செய்வது சற்று கடினம்தான்.

  

இந்த ஸ்டார் ரோபோ சில வேலைகளை செய்யும்போது மனிதர்களின் அறிவுரைகளை கேட்டு செயல்படுகிறது.  மனிதர்கள் ஒருமுறை தெளிவாக கூறினாலே போதும் அதுவே செய்துவிடும்.   அடுத்தடுத்து நான்கு பன்றிகளுக்கு குடல் இணைப்பு அறுவை சிகிச்சையை செய்திருக்கும் ஸ்டார் ரோபோ  மருத்துவ உலகின் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

PIG, SURGERY, STAR ROBOT, AMERICA, AMERICAN RESEARCH, ROBOT SURGERY, DOCTORS, WORLD FIRST TIME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்