முடிவுக்கு வருமா இலங்கை நெருக்கடி? .. புதிதாக பதவியேற்ற நிதியமைச்சர் எடுத்த பரபரப்பு முடிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் இலங்கையில் நேற்று புதிய நிதியமைச்சராக பதவியேற்றுக்கொண்ட அல் ஜாப்ரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

Advertising
>
Advertising

தந்தையை அடக்கம் செய்துவிட்டு வந்த மகன்.. ஒருவாரம் கழிச்சு வீட்டு வாசல்ல நின்ன அப்பா.. அதிர்ந்துபோன கிராம மக்கள்..!

நெருக்கடி

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. அரிசி, பிரெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், உணவு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ராஜினாமா

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆளுங்கட்சியை சேர்ந்த 26 கேபினெட் அமைச்சர்கள் ஒரே நேரத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து நேற்று புதிதாக நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பெய்ரிஸ், கல்வித்துறை அமைச்சராக தினேஷ் குணவர்த்னேவும், நெடுஞ்சாலை துறை அமைச்சராக ஜான்ஸ்டன் பெர்னாண்டோவும் நிதி அமைச்சராக அல் ஜாப்ரியும் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், இன்று தனது பதவியை ஜாப்ரி ராஜினாமா செய்ததை அடுத்து இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

எதிர்க் கட்சிகள்

இலங்கையில் கடும் பொருளாதர நெருக்கடியை தொடர்ந்து ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவையை உருவாக்க அதிபர் கோத்தபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். ஆனால், இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான எஸ்ஜேபி உள்ளிட்ட கட்சிகள் இந்த அழைப்பை புறக்கணித்து, அதிபரை பதவி விலகும்படி போராடிவருகின்றன.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் புதிய நிதி அமைச்சர் பதிவியேற்ற அடுத்த நாளே ராஜினாமா செய்திருப்பது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'போன்-அ செக் பண்ணனும்னு போலீஸ் கேட்டா.. இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க'..அதிரவிட்ட கமிஷ்னர்..!

SRILANKAN, FINANCE MINISTER, RESIGN, PARTY LOSS MAJORITY, SRILANKA ECONOMIC CRISIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்