"இன்னும் சில நாள்ல ஹாஸ்பிடல்-ல இருக்க பேஷண்ட் எல்லாம்".. இலங்கை மருத்துவர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கை சுதந்திரம் பெற்றபிறகு முதன்முறையாக மிக மோசமான பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதனிடையே நெருக்கடி காரணமாக மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Advertising
>
Advertising

ரஷ்யாவுக்கு புதிய நெருக்கடி?.. 11 வருஷத்துக்கு அப்புறம் ஐநா வைத்த செக்.. ஆட்டம் சூடுபிடிக்குது!

அதிருப்தி

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலையும் விண்ணை தொட்டுள்ளது. அரிசி, பிரெட், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், உணவு பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தினந்தோறும் 13 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு

அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து அத்தியவசிய பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இலங்கை. அதுமட்டும் அல்லாமல் நாட்டில் உள்ள மருந்து பொருட்கள் கையிருப்பு குறைந்துவிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அந்நாட்டு மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள்," சாதாரண சிகிச்சைகள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில், உயிருக்கு போராடும் மக்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தால் அந்த நோயாளிகள் இறக்கும் சூழ்நிலை ஏற்படலாம்" என எச்சரித்துள்ளனர்.

கடிதம்

மேலும், இலங்கையில் விரைந்து மருத்துவ பொருட்களுக்கான தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என இலங்கை மருத்துவர் சங்கம் அதிபர் கோட்டபய ராஜபக்ஷேவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இலங்கையின் பல்வேறு இடங்களில் அரசுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வரும் நிலையில், அங்குள்ள நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துவருகிறார்கள்.

இதன் இடையே இந்தியா எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ராஜபக்ஷே எடுத்த முக்கிய முடிவு.. மக்கள் போராட்டம்..!

SRILANKA, DOCTORS, SRILANKAN DOCTORS, PROTEST, SRILANKAN DOCTORS PROTEST, DRUG SHORTAGES, ECONOMIC CRISIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்