உலகின் மிகப்பெரிய நீல ரத்தினக்கல்... 2,500 கோடி ரூபாய் மதிப்பு... கண்டெடுத்த இலங்கைக்கு பேரதிர்ஷ்டம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய நீல ரத்தினக் கல் இலங்கையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் ராணி என்று அழைக்கப்படும் நீல ரத்தினக் கல்லை முதன் முறையாக வெளி உலகுக்குக் காட்டியுள்ளது இலங்கை.

உலகின் மிகப்பெரிய நீல ரத்தினக்கல்... 2,500 கோடி ரூபாய் மதிப்பு... கண்டெடுத்த இலங்கைக்கு பேரதிர்ஷ்டம்..!
Advertising
>
Advertising

இலங்கையில் ரத்தினாபுரம் என்ற இடத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மிகவும் அரிதான, பெரிதான விலை மதிப்பு மிக்க ரத்தினக்கல் ஒன்று கிடைத்தது. ரத்தினாபுரம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சுமார் 85 கி.மீ தொலைவில் உள்ளது.

srilanka unveils world's biggest blue sapphire stone

3 மாதங்களுக்கு முன்னர் பூமியில் இருந்து இந்தக் கல் கிடைக்கப்பெற்றாலும் தற்போது தான் உலகுக்கு அறிமுக செய்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய ரத்தினக்கல் மற்றும் நகைகள் அமைப்பின் சார்பில் விரைவில் இந்தக் கல் சர்வதேச சந்தையில் விற்கப்பட உள்ளது.

srilanka unveils world's biggest blue sapphire stone

இதற்காக இலங்கை அரசு சார்பில் சில ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இந்த ரத்தினக் கல்லில் அலுமினியம் ஆக்சைடு, டைட்டானியம், இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக இந்த ரத்தினக் கல்லை சர்வதேச சந்தையில் அதிகப்படியான விலைக்கு விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் மொத்தம் 310 கிலோ எடை கொண்டது ஆகும். இதன் மதிப்பு சுமார் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் கூட இதே ரத்தினபுரத்தில் 510 கிலோ கேரட் கொண்ட ரத்தினக்கல் ஒன்று கிணறு தோண்டும் போது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SRILANKA, BLUE SAPPHIRE STONE, QUEEN OF ASIA, இலங்கை, நீல ரத்தினக்கல், ஆசியாவின் ராணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்