'இந்த 'ஜூஸ்'ல செம விஷயம் இருக்கு'... 'பேஸ்புக்கில் வந்த வீடியோ'... நம்பியவருக்கு நேர்ந்த கொடுமை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த ஜூஸை குடித்தால் உடல் தெம்பாக இருக்கும் என பேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து அதனைக் குடித்தவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இந்த 'ஜூஸ்'ல செம விஷயம் இருக்கு'... 'பேஸ்புக்கில் வந்த வீடியோ'... நம்பியவருக்கு நேர்ந்த கொடுமை!

இலங்கையின் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் அதிகமாக பேஸ்புக்கில் நேரம் செலவிடுவது வழக்கம். அதில் வரும் வீடியோகளை தொடர்ந்து பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு உடல் ஆரோக்கியம் குறித்து வரும் வீடியோகளை பார்ப்பதும் வழக்கம்.

அந்தவகையில் பேஸ்புக்கில் வந்த வீடியோ ஒன்றில், 'கஜ மாடரா' என்ற மரத்தின் இலைகளைப் பறித்து அதனைச் சாறாகப் பிழிந்து குடித்தால் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் எனத் தகவல் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரும் அவ்வாறு அந்த இலைகளைச் சாறாக மாற்றிக் குடித்துள்ளார். ஆனால் அவர் குடித்த சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து கீழே விழுந்துள்ளார். 

மகன் திடீரென மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபரின் தாய் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்கள். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.

இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரின் உடலில் விஷம் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளார்கள். பேஸ்புக் வீடியோவை பார்த்து ஜூஸ் போட்டுக் குடித்த நபர் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SRILANKA, FACEBOOK, HEALTH DRINK, DIES, GAMPAHA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்