வானத்தில் பறந்த 'இளைஞர்'.. பட்டம் விட போய் சிக்கிக் கொண்டதால் 'பரபரப்பு'..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நண்பர்களுடன் சேர்ந்து பட்டம் ஒன்றைப் பறக்க விட முயன்ற இளைஞர் ஒருவர், கயிற்றைப் பிடித்துக் கொண்டு தானும் சேர்ந்து பறந்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

Advertising
>
Advertising

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியை அடுத்த பருத்தித்துறை - புலோலி என்னும் கிராமத்தில், இளைஞர்கள் பலர் சேர்ந்து, சுமார் 13 அடி உயரம் கொண்ட ராட்சச பட்டம் ஒன்றை செய்துள்ளனர். அதனை பறக்க விட வேண்டி தயாராகிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த இளைஞர்கள் பலர், நீளமுள்ள கயிறைப் பிடித்துக் கொண்டு, பட்டத்தை மெதுவாக பறக்க விட்டனர். அந்த வேளையில், காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால், இளைஞர்களின் கட்டுப்பாட்டிற்குள் பட்டத்தின் கயிறு நிற்கவில்லை.

அந்த சமயத்தில், முன் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விடுவதற்குள், பின் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விட்டு விட்டனர். அடுத்த கணமே, காற்றின் வேகத்தோடு, முன் பக்கத்தில் கயிறைப் பிடித்துக் கொண்டு இருந்த இளைஞரும், பட்டத்துடன் தூக்கிச் செல்லப்பட்டார்.

சுமார் 40 அடிக்கும் மேல், அந்த இளைஞர் பறந்து சென்ற நிலையில், கயிற்றின் பிடியை விடாமல், கெட்டியாக பிடித்துக் கொண்டு, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால், அங்கிருந்த இளைஞர்கள் பதறிய நிலையில், கீழே குதித்து விடு என இளைஞரிடம் கூறி கூச்சலிட்டனர். சற்று உயரத்தில் இருந்த போதும், மனம் தளராத இளைஞர், மெல்ல மெல்ல தனது பிடியை நகர்த்தி, சுமார் 20 அடி தூரம் வரை வந்தார். அதன் பிறகு, மணல் பகுதியில் குதித்ததால், சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

 

தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராட்சச பட்டம் ஒன்றை விட முயன்று, காற்றின் வேகத்தால், இளைஞர் ஒருவர் காற்றில் பறந்து போய், அந்தரத்தில் பறந்தது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

SRILANKA, KITE, இலங்கை, பட்டம், வைரல் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்