"என்ன வேணும்னாலும் செய்ங்க.. ஆனா".. ராணுவத்துக்கு ஆர்டர் போட்ட ரணில்.. என்ன நடக்கிறது இலங்கையில்..?
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கையில் அமைதியை கொண்டுவருமாறு ராணுவம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் ரணில் விக்ரமசிங்கே.
Also Read | "நன்றி அப்பா".. கலைஞர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்த குஷ்பூ.. பின்னணி என்ன..?.. வைரலாகும் ட்வீட்..!
போராட்டம்
கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்தனர். இன்று அதிகாரப்பூர்வமாக கோத்தபய பதவி விலக இருந்தார்.
அவசரநிலை
இந்நிலையில், அதிபர் தனது குடும்பத்தினருடன் ராணுவ ஜெட்டில் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாட்டை விட்டு வெளியேற தனக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என கோத்தபய கோரிக்கை வைத்ததாகவும் அதன் பின்னரே விமானப்படையின் ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பொறுப்பு அதிபராக செயல்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. மேலும், நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்வதாகவும், மேற்கு பிராந்தியங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறார் ரணில். ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
என்ன வேணும்னாலும் செய்ங்க
அவசரநிலை கருதி, இலங்கையின் அதிபர் பொறுப்பை வகிக்கும் ரணில் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் காவல்துறைக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அதில், "நாட்டில் அமைதி திரும்ப தேவையானவற்றை செய்யவும். அரசியல் அமைப்பை நாம் கிழித்துவிட முடியாது. ஜனநாயகத்துக்கு எதிரான நாஜிக்களின் ஆபத்தை நாம் தடுக்க வேண்டும்" என அந்த உத்தரவில் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபய வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நிலையில், ராணுவம் மற்றும் காவல்துறைக்கு ரணில் உத்தரவிட்டிருப்பது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | JEE முதல் நிலைத்தேர்வில் தமிழக அளவில் முதலிடம்.. சாதித்துக்காட்டிய கோவை மாணவி தீக் ஷா..!
மற்ற செய்திகள்
"Dealing எல்லாம் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்'ல தான்.." இளைஞர்கள் செய்து வந்த காரியம்.. பரபரப்பில் மதுரை
தொடர்புடைய செய்திகள்
- Breaking: "இலங்கையில் அவசரநிலை பிரகடனம்.. மக்கள் வெளியே வரக்கூடாது".. அதிபர் பொறுப்பை கையில் எடுத்த பிரதமர் ரணில்.. முழு விபரம்..!
- இலங்கை அரசியலில் திருப்பம்.. ராணுவ ஜெட்டில் வெளிநாட்டுக்கு தப்பிய அதிபர் கோத்தபய.. பரபரப்பில் இலங்கை..!
- "எனக்குன்னு இருந்தது அந்த வீடு மட்டும்தான் இப்போ அதுவும்".. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உருக்கம்..!
- இலங்கை அதிபர் மாளிகையில்.. பீரோ பின்னாடி இருந்த வழி.. "லிஃப்ட் வசதி வேற இருக்கா..?" - மிரண்டு போன போராட்டக்காரர்கள்
- "இனி ஒரு நாளைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாது"...இலங்கை அரசு வெளியிட்ட பகீர் தகவல்..பரபரப்பில் உலக நாடுகள்..!
- பெட்ரோல் வாங்க 5 நாள் கியூ..அடுத்தடுத்து நிகழும் துயரம்.. இலங்கையின் தற்போதைய நிலை என்ன?
- இலங்கை வரலாற்றுலயே இவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனையானது கிடையாது..நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த விலை உயர்வு..!
- கலவர பூமியாக மாறிய இலங்கை.. பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே..!
- "பேசாம இலங்கையை வாங்கிடுங்க.. சிலோன் மஸ்க்-னு பெயர் வச்சுக்கலாம்".. எலான் மஸ்க்கு அட்வைஸ் செஞ்ச இந்திய தொழிலதிபர்..!
- "மூத்த அண்ணன் இந்தியாவுக்கு நன்றி".. இலங்கைக்கு உதவிசெய்யும் இந்தியாவை பாராட்டிய முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்..