'90ஸ் கிட்ஸ் அலெர்ட்'...'கொரோனாக்கு அப்பறோம் கல்யாணம் பண்ணிக்கலாம்'... ஆனா இவ்வளவு 'ரூல்ஸ்' இருக்கு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், பல நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பொருளாதாரம் அடியோடு முடங்கியுள்ள நிலையில், பல திருமணங்களும் தடைபட்டுள்ளன. ஏற்கனவே தேதி குறிக்கப்பட்ட திருமணங்கள் எதுவும் நடைபெறாமல் தடைப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருமணம் செய்வதற்காகக் காத்திருப்பவர்களுக்கு இலங்கையின் சுகாதார அமைச்சகம் சார்பில் சில பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

''திருமண தம்பதிகள் மற்றும் உறவினர் ஒருவரை கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் மற்றும் கைகுலுக்கி கொள்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வேறு முறையில் தங்களது அன்பை பரிமாறி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு முன்பு திருமணம் செய்ய முடிவு செய்தவர்கள் தங்களது திருமணத்தை நடத்தி கொள்ளலாம், ஆனால் அவர்களுக்கும் இந்த விதி பொருந்தும். திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட அனைவருமே மண்டபத்திற்குள் செல்ல முடியாது.

திருமணத்திற்கு வரும் உறவினர்கள் கண்டிப்பாக முக கவசங்களை அணிய வேண்டும். ஒரு மீட்டர் தூர இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மண்டபத்திற்குள் வருவதற்கு முன்பு கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும்.  மண்டபத்திற்கு வருவதற்கு முன்னரும், மண்டபத்தில் இருந்து வெளியேரும் போதும் அனைத்து உபகரணங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.

நீர் பருகும் குவளைகள் மற்றும் உணவு உண்ணும் தட்டுகள் ஆகியவற்றை அனைவருக்கும் பொதுவாக பயன்படுத்த கூடாது. உணவு பகிர்வதற்காக தனியாக ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும்.” என சுகாதார அமைச்சகத்தின் இயக்குனர்களில் ஒருவரான நாயகம் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த விதிமுறைகள் இணையத்தில் வைரலானதையடுத்து பலரும் 90ஸ் கிட்ஸ் ரொம்ப பாவம் என கிண்டல் செய்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்