ராஜபக்சே சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை.. உச்ச நீதிமன்றம் அதிரடி.. மீண்டும் பரபரப்பான இலங்கை..இப்ப என்ன ஆச்சு..?
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இலங்கை போராட்டம்
கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
அதிரடி மாற்றங்கள்
இதனை தொடர்ந்து அதிபர் கோத்தபய நாட்டை விட்டு தப்பித்து மாலத்தீவுக்கு சென்று பின்னர் அங்கிருந்த சிங்கப்பூருக்கு சென்றார். இதனால் இலங்கையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதனையடுத்து இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தினேஷ் குணவர்த்தன-வுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
வெளியேற தடை
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரை ஆகஸ்டு 2 ஆம் தேதி வரையில் நாட்டை விட்டு வெளியறக்கூடாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை ஜூலை 28 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் இந்த மீண்டும் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விசாரணை கடந்த புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது 3 பேரும் ஆகஸ்டு 2 ஆம் தேதிவரையில் நாட்டை விட்டு வெளியேற கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் மீண்டும் இலங்கையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
Also Read | இட்லி முதல் இத்தாலி வரை... செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள்.. அடேங்கப்பா இவ்வளவு வகைகளா..?
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இலங்கையின் புதிய பிரதமர் ஆனார் ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தன.. முழு விபரம்..!
- Breaking: இலங்கையின் புதிய அதிபர் யார்.?.. தேர்தல் முடிவுகளை வெளியிட்டது நாடாளுமன்றம்..!
- "எல்லார்கிட்டயும் Help கேட்ருக்கோம்.. இந்தியா மட்டும் தான் எங்களுக்கு உதவுது".. இலங்கை அமைச்சர் உருக்கம்..!
- மாலத்தீவுல இருந்து சிங்கப்பூருக்கு பறந்த கோத்தபய... போன உடனேயே இலங்கை சபாநாயகருக்கு அனுப்பிய ஈமெயில்.. பரபரப்பான இலங்கை..!
- "இந்தியாவுக்கு ரொம்ப நன்றி.. ஆரம்பத்துல இருந்தே நெறய ஹெல்ப் செஞ்சாங்க".. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் உருக்கம்..!
- இலங்கை அதிபர் மாளிகைல இருந்த ரகசிய அறை.. கத்தை கத்தையா பணத்தை பார்த்து திகைச்சு போன போராட்டக்காரர்கள்..!
- "நிலைமை கைமீறி போய்டுச்சு".. இலங்கை அதிபர் மாளிகையை வசப்படுத்திய பொது மக்கள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிவிப்பு..!
- "9 மாசத்துல 28 'States' பயணம்.." சோதனையை சாதனையா மாத்திய இளைஞர்.. "செலவு எவ்ளோனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.."
- “யார் பெயரையும் சொல்ல விரும்பல”.. “ஐபிஎல் போட்டியை விட்டுட்டு நாடு திரும்புங்க”.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் இலங்கை வீரர்..!
- "இன்னும் சில நாள்ல ஹாஸ்பிடல்-ல இருக்க பேஷண்ட் எல்லாம்".. இலங்கை மருத்துவர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!