"இனி ஒரு நாளைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாது"...இலங்கை அரசு வெளியிட்ட பகீர் தகவல்..பரபரப்பில் உலக நாடுகள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கையில் கைவசம் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் அளவு ஒரு நாளைக்கு கூட போதுமானதாக இருக்காது என அந்நாட்டு சிலோன் பெட்ரோலிய கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ப்பா.. என்ன இது இப்டி இருக்கு?!.." வாயை பிளந்த மீனவர்கள்.. "100 வருஷத்துக்கு மேல வாழ்ந்துட்டு இருக்காம்.."

22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை, கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திணறி வருகிறது. இதனிடையே செலவுகளை கட்டுப்படுத்தவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

எரிபொருள் தட்டுப்பாடு

இலங்கை முழுவதும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு மக்கள் கையில் கேன்களுடன் வரிசையில் நின்று வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசிடம் 1,100 டன் பெட்ரோல் மற்றும் 7,500 டன் டீசல் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், இது ஒருநாள் தேவைக்கு கூட போதுமானதாக இருக்காது எனவும் சிலோன் பெட்ரோலிய கார்ப்பரேஷனை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உலக நாடுகள் பலவும், ஏற்கனவே இருக்கும் கடன் தொகையினால் புதிதாக இலங்கைக்கு கடன் கொடுக்க முன்வரவில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இலங்கை. அடுத்த வாரமும் இலங்கைக்கு பெட்ரோல் இறக்குமதி இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும், எரிபொருள் வினியோகம் செய்ய முடிவெடுத்திருக்கிறது அரசு.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே

இந்நிலையில், அடுத்த பெட்ரோல் இறக்குமதி வரையில் பொது போக்குவரத்து, மின்சார உற்பத்தி, தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு மட்டும் கையில் இருக்கும் எரிபொருட்கள் வழங்க முடிவு செய்துள்ளது சிலோன் பெட்ரோலிய கார்ப்பரேஷன். இருப்பினும் அடுத்து எப்போது இலங்கைக்கு பெட்ரோல் கிடைக்கும் என்பது நிஜமாகவே மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. ஏற்கனவே பொருளாதர சிக்கலில் தவிக்கும் இலங்கை தற்போது பெட்ரோலிய பொருட்களுக்கான கடும் தட்டுப்பாட்டில் இருப்பது தங்களை கடுமையாக பாதித்து வருவதாக அந்நாட்டு மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | செல்ல நாயுடன் காணாமல் போயிருந்த கனடா இளம் பெண்.. கடைசியில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்.! கதறி அழுத பெற்றோர்.

SRI LANKA, SRI LANKA ECONOMIC CRISIS, FUEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்