மாலத்தீவுல இருந்து சிங்கப்பூருக்கு பறந்த கோத்தபய... போன உடனேயே இலங்கை சபாநாயகருக்கு அனுப்பிய ஈமெயில்.. பரபரப்பான இலங்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இலங்கையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டம்
கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்துவந்த இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் கடந்த வாரம் தடையை மீறி நுழைந்தனர். மேலும், மாளிகையில் இருக்கும் அறைகள் மற்றும் நீச்சல் குளங்களை போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்தன. அதிபர் மற்றும் பிரதமர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்தனர். நேற்று அதிகாரப்பூர்வமாக கோத்தபய பதவி விலக இருந்தார்.
எமெர்ஜென்சி
இந்நிலையில், நேற்று அதிபர் தனது குடும்பத்தினருடன் ராணுவ ஜெட்டில் மாலத்தீவிற்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பொறுப்பு அதிபராக செயல்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. மேலும், நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்வதாகவும், மேற்கு பிராந்தியங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறார் ரணில்.
இந்நிலையில், மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாகவும் பிரைவேட் ஜெட் வேண்டுமென கோத்தபய கோரிக்கை வைத்திருப்பதாக சபாநாயகர் அபேவர்தன இன்று காலையில் தெரிவித்திருந்தார்.
பதவி விலகல்
இதனை தொடர்ந்து, சவூதி அரேபிய விமானம் மூலமாக இன்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்த கோத்தபய தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்த பின்னர், நாளை சபாநாயகர் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க, அரசு அலுவலகங்களை கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து இலங்கை மக்கள் போராடி வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
மற்ற செய்திகள்
"கட்டிப்புடி வைத்தியம்.." 7,000 ரூபாய் வரை கட்டணம்.. இளைஞரின் தொழில்.. மெய்சிலிர்க்க வைக்கும் காரணம்
தொடர்புடைய செய்திகள்
- பதவி விலக மறுக்கும் கோத்தபய.. பிரைவேட் ஜெட் வேண்டும் என கோரிக்கை... பரபரப்பில் இலங்கை..!
- "இந்தியாவுக்கு ரொம்ப நன்றி.. ஆரம்பத்துல இருந்தே நெறய ஹெல்ப் செஞ்சாங்க".. முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் உருக்கம்..!
- இலங்கை அதிபர் மாளிகைல இருந்த ரகசிய அறை.. கத்தை கத்தையா பணத்தை பார்த்து திகைச்சு போன போராட்டக்காரர்கள்..!
- "நிலைமை கைமீறி போய்டுச்சு".. இலங்கை அதிபர் மாளிகையை வசப்படுத்திய பொது மக்கள்.. அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிவிப்பு..!
- 5 லட்சம் கோடி மதிப்புள்ள கம்பெனியின் CEO பதவியை ராஜினாமா செய்த நபர்.. அதுக்கு அவரு சொன்ன காரணம் தான் பலரையும் ஷாக்-ஆக வச்சிருக்கு..!
- ஒரே வீடியோ காலில் 900 பேரை வேலையைவிட்டு தூக்கிய CEO வின் அடுத்த பிளான்.. அடுத்தடுத்து குவிந்த ஊழியர்களின் ராஜினாமா கடிதங்கள்..என்ன ஆச்சு?
- கலவர பூமியாக மாறிய இலங்கை.. பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே..!
- “யார் பெயரையும் சொல்ல விரும்பல”.. “ஐபிஎல் போட்டியை விட்டுட்டு நாடு திரும்புங்க”.. பரபரப்பை கிளப்பிய முன்னாள் இலங்கை வீரர்..!
- "இன்னும் சில நாள்ல ஹாஸ்பிடல்-ல இருக்க பேஷண்ட் எல்லாம்".. இலங்கை மருத்துவர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!
- இலங்கை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ராஜபக்ஷே எடுத்த முக்கிய முடிவு.. மக்கள் போராட்டம்..!