கலவர பூமியாக மாறிய இலங்கை.. பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பேட்டிங் பண்றதுக்கு முன்னாடி தோனி சொன்ன ‘ஒரு’ அட்வைஸ்.. ‘ஆட்டநாயகன்’ விருது வாங்கிய CSK வீரர் சொன்ன சீக்ரெட்..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை பிரச்னை, விலைவாசி உயர்வு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதனை அடுத்து குடும்ப உறுப்பினர்களை அரசில் இருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே நீக்கினார். ஆனால், தனது சகோதரர் மகிந்த ராஜபக்சேவை  மட்டும் பிரதமராக நீட்டிக்க செய்தார்.

மேலும் மகிந்த ராஜபக்சேவும் பதவியில் இருந்து விலக மாட்டேன் என விடாப்பிடியாக இருந்து வந்தார். ஆனாலும் எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கையில் இருந்து பின் வாங்கவில்லை. இந்த சூழலில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதாரவாளர்கள் இன்று காலை திடீரென தாக்குதல் நடத்தினர். இதனால் தலைநகர் கொழும்புவில் வன்முறை வெடித்தது. இதனை அடுத்து அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த கலவரத்தில் இலங்கை எம்பி ஒரு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

SRI LANKA, SRI LANKA PM MAHINDA RAJAPAKSA, ECONOMIC CRISIS, MAHINDA RAJAPAKSA RESIGNS, இலங்கை, மகிந்த ராஜபக்சே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்