பெட்ரோல், டீசலை சிக்கனமா பயன்படுத்துங்க..! அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட அதிபர்.. இலங்கையில் என்ன நடக்கிறது..?
முகப்பு > செய்திகள் > உலகம்இலங்கையில் பொருளாதார அவசரநிலை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டுகளாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் முக்கிய வருவாய்களுள் ஒன்றான சுற்றுலாத்துறையும் கொரோனாவால் முடங்கிப்போயுள்ளது. இதனால் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் உணவுப் பொருள்கள் பதுக்கல் அதிகரித்து வருவதால், அத்தியாவசிய பொருள்கள் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பொருள்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அந்நாட்டில் பொருளாதார அவசரநிலையை (Economic emergency) பிறப்பித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய பொருள்களை பதுக்கலை தடுக்க முன்னாள் ராணுவ தளபதி ஒருவரை நியமித்துள்ளார். வியாபாரிகள் பதுக்கும் உணவுப்பொருள்களை பறிமுதல் செய்யவும், பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் இவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரிசி, சர்க்கரை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருள்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இலங்கை பொருளாதார அவசரநிலையை அமல்படுத்தப்பட்டது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மற்ற செய்திகள்