'வேகமெடுக்கும் கொரோனா'... 'இந்தியப் பயணிகள் யாரும் வரக்கூடாது'... அதிரடி தடை போட்ட நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக இன்று 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போலத் தாக்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக இன்று 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 2,30,168 ஆக உயர்ந்து உள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்தியப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர ஏற்கனவே தடை விதித்தது.

அந்த வகையில் இந்தியப் பயணிகள் இலங்கை வரத் தடை விதிக்கப்படுவதாக, இலங்கை விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அரசு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்