'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்த Sputnik-V'.. டெல்டா கொரோனாவவை வீழ்த்துமா?.. திடீரென ஏகிறிய டிமாண்ட்!.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக எந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படும் என பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்பட்டு வருகின்றன. எனினும், அவற்றின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து அவ்வப்போது ஆய்வு முடிவுகள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, டெல்டா வகை கொரோனா வைரஸ் பிற வகைகளை காட்டிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வைரசுக்கு எதிராக 83 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக உள்ளது என ரஷ்ய சுகாதாரத்துறை மந்திரி மிக்கெல் முரஷ்கோ தெரிவித்துள்ளார்.

எனினும், ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வைரசுக்கு எதிராக, அவர்கள் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலேயே செயல்திறன் கொண்டதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்