ஆளே இல்லாத மர்ம தீவுல எடுக்கப்பட்ட புகைப்படம்.. அதுல மங்கலா தெரிஞ்ச உருவம்.. உலக அளவில் வைரலான புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அயர்லாந்தில் உள்ள தீவு ஒன்றில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவிக்கொண்டிருக்கின்றன.

ஆளே இல்லாத மர்ம தீவுல எடுக்கப்பட்ட புகைப்படம்.. அதுல மங்கலா தெரிஞ்ச உருவம்.. உலக அளவில் வைரலான புகைப்படம்..!
Advertising
>
Advertising

Also Read | திடீர்னு ஏற்பட்ட பிரம்மாண்ட துளை.. நடுங்கிப்போன மக்கள்.. ஆராய்ச்சியாளர்களையே அதிர வச்ச சம்பவம்.. உள்ளே அப்படி என்ன இருக்கு?

அயர்லாந்து நாட்டில் உள்ளது இஞ்சகோயில் தீவு (Inchagoill Island). இதன் வரலாறு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 5 ஆம் நூற்றாண்டில் இங்கு கிறிஸ்தவர்கள் குடியேறியுள்ளனர். அதற்கு முன்னர் இந்த தீவில் பேகன்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் இங்கு சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் நிபுணர்களையே குழம்ப செய்துவிட்டது. காரணம் அதில் தெரியும் வினோதமான உருவம் தான்.

Spooky mysterious photo from abandoned house on island

மங்கலான உருவம்

இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் தீயாய் பரவ, அமானுஷ்ய விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யும் அயர்லாந்து குழு ஒன்று அந்த தீவுக்கு மீண்டும் சென்றிருக்கிறது. அவர்களுடன் 9 பொதுமக்களும் உடன் சென்றிருக்கிறார்கள். ஏற்கனவே மர்மமாக திகழும் புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்துக்கு அவர்கள் மீண்டும் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த குழுவினர் K2 மீட்டர், SLS கேமரா போன்ற அதிதொழில்நுட்ப கருவிகளுடன் அந்த தீவில் கால் பதித்திருக்கின்றனர். அப்போது, பாழடைந்த வீட்டை புகைப்படம் எடுக்க இந்த குழுவினர் முயற்சித்தனர். வீட்டின் வாசல் பகுதியில் இருவர் நிற்க இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு பின்னர் தான் குழுவினருக்கும் பொது மக்களுக்கும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் மங்கலாக ஒரு ஆணின் முகம் தெரிவது போல் இருக்கிறது.

ஆணின் முகம்

இதுகுறித்து பேசிய இந்த குழுவை சேர்ந்த ரிச்சர்ட்,"படத்தில் நாங்கள் இரண்டு நபர்களின் புகைப்படங்களை பார்த்தோம். அவர்களில் ஒருவர் வீட்டு வாசலில் மிகவும் சங்கடத்துடன் நின்றதாக எங்களிடம் கூறினார். நாங்கள் இந்த படத்தை அவரிடம் காட்டியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். அதை தொடர்ந்து அந்த தீவுக்கு எங்களுடன் வந்திருந்த 9 பேரிடமும் இந்த புகைப்படத்தை காட்டினோம். அவர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தில் ஆணின் முகம் தெரிவதாக கூறினார்கள்" என்றார்.

இந்நிலையில், இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே இப்புகைப்படம் பல்வேறு கேள்விகளை நெட்டிசன்களிடையே எழுப்பியுள்ளது. இது எடிட் செய்யப்பட்டது போலிருக்கிறது என்றும் எதேச்சையாக சில நேரங்களில் தோன்றும் காட்சிப் பிழைகள் கூட இப்படி தோற்றமளிக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read | "அன்னைக்கு ஒரே நைட்ல எல்லாம் மாறிடுச்சு.. காலைல கண்ணாடில முகத்தை பார்த்தப்போ".. வாடகை வீட்டில் குடியேறிய தம்பதிக்கு ஏற்பட்ட பயங்கரம்..!

SPOOKY PHOTOS, ABANDONED HOUSE, ISLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்