'என் குடும்பத்துக்கு என்ன ஆனது'?... 'இதயத்தை நொறுக்கும் ரஷீத் கானின் பதிவு'... முக்கிய தகவலை வெளியிட்ட கெவின் பீட்டர்சன்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்டார் ஸ்பின்னர் ரஷீத் கான் தனது குடும்பத்தினர் குறித்து வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலைக் கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் அஷ்ரப் கனி மாளிகையில் இல்லை. அவர் தஜிகிஸ்தான் நாட்டுக்குத் தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் முழு கட்டுப்பாடும் தாலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தச்சூழ்நிலையில் ஸ்டார் ஸ்பின்னர் ரஷீத் கான் தன் குடும்பத்தினரை ஆப்கானிலிருந்து மீட்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். தனது மனதில் இருக்கும் வலியைத் தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் அவர் போட்டுள்ள பதிவு பலரது இதயங்களை நொறுக்கியுள்ளது.
இதற்கிடையே ரஷீத் கான் இப்போது இங்கிலாந்தில் ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில், உலக தலைவர்களே ஆப்கான் மக்களைக் காப்பாற்றுங்கள் என அறைகூவல் விடுத்ததாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், நானும் ரஷீத் கானும் தற்போது ஆப்கானில் நடக்கும் விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினோம்.
தற்போது வரை ரஷீத் கானின் குடும்பத்தினரை ஆப்கானிலிருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை. இது அவரை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது. உள்நாட்டில் இப்படிப்பட்ட ஒரு பெரும் குழப்பமான சூழ்நிலையில் அவர் இங்கிலாந்தில் ஹண்ட்ரட் அணிக்காகப் பிரமாதமாக ஆடிவருவது, அதுவும் கடும் அழுத்தத்தில் ஆடி வருவது, இந்த ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் மிகவும் உள்ளத்தை உருக்கும் ஒரு அத்தியாயமாக இருக்கிறது.
தன் குடும்பம் அங்கு நெருக்கடியில் இருக்கும் போது அவர் அதை மனதிற்குள் வைத்துக் கொண்டு இங்கு ஆடும் திறனை வெளிப்படுத்துவது உண்மையில் நெகிழ்ச்சியானது. பெரிய விஷயம் என்று கெவின் பீட்டர்சன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீரென உள்ளே புகுந்த அமெரிக்க படைகள்!.. காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு!.. செய்வது அறியாது கதறும் ஆப்கானிஸ்தான்!
- 'எங்க இருந்து இவ்வளவு காசு வருது'... 'விழிபிதுங்க வைக்கும் தாலிபான்களின் சொத்து மதிப்பு'... இதுவரை அமெரிக்கா செலவிட்ட மொத்த தொகை!
- ஆப்கானிஸ்தானின் புதிய அதிபர் 'இவர்' தான்!.. தாலிபான்கள் வியூகம்!.. யார் இவர்? பின்னணி என்ன?
- 'கையை வச்சிட்டு சும்மா இல்லாம'... 'Google Search-யில் மாணவர் கேட்ட கேள்வி'... ஆப்கனிஸ்தானில் கதிகலங்கி நிற்கும் பரிதாபம்!
- 'உலகம் எது நடக்க கூடாதுன்னு நினைச்சுதோ அது நடந்து போச்சு'... '300 பேர் போக கூடிய விமானத்தில்'... அதிர்ச்சி அளிக்கும் வீடியோ காட்சிகள்!
- 'ஒரே இரவில் தூக்கி எறியப்பட்ட அந்தஸ்து'!.. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனியின்... தற்போதைய நிலை என்ன தெரியுமா?
- "எங்கள பத்தி விஷமத்தனமான பிரச்சாரம் பண்றாங்க"!.. திடீரென ட்விஸ்ட் கொடுத்த தாலிபான்கள்!.. திரைமறைவில் நடப்பது என்ன?
- உடனே கிளம்புங்க...! 'அடுத்தடுத்து திருப்பம்...' 'கூடுதல் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு...' - என்ன நடக்கிறது...?
- நெருங்கியது Climax!.. தலைநகர் காபூலுக்குள் தடாலடியாக நுழைந்த தாலிபான்கள்!.. உலகமே உற்றுநோக்கும் ஆப்கானிஸ்தானில் அடுத்தது என்ன?
- 'நெலமை கைய மீறி போயிடுச்சு'!.. உளவுத்துறை விடுத்த எச்சரிக்கை!.. தாலிபான்களிடம் அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை!.. மாஸ்டர் ப்ளான்!