'வருசத்துக்கு 10 குழந்தைகள்'... 'இதுவரை 150 குழந்தைகள்'... உயிரணு தானத்தில் அசத்தும் வித்தியாசமான மனிதர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் அமெரிக்கரான ஜோ டோனர், ஆண்டுக்கு 10 குழந்தைகள் வீதம் இதுவரை 150 குழந்தைகள் பிறந்து இருப்பதாகக் கூறியுள்ளார். கொரோனா நேரத்திலும் பிரிட்டன் பெண்கள் சுமார் 15 பேருக்கு உயிரணு தானம் செய்துள்ளார். அதில் 3 பேர் தாயான செய்தியை அறிந்து, இதுதான் என்னுடைய சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் ஜோ.

தன்னிடம் உயிரணு தானம் பெற்ற பெண்கள் பலரும் அவர்களுக்குக் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்புவது உண்டு எனக் கூறும் ஜோ, அதில் பலர் இன்னும் என்னுடன் நட்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது அந்த குழந்தைகள் நாளைக்கு அவர்களின் சகோதர, சகோதரிகளைத் தேடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இதனிடையே ஜோ, அமெரிக்கா, அர்ஜெண்டினா, இத்தாலி, சிங்கப்பூர், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உயிரணு தானம் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்