'8 மாதங்களுக்கு' முன்பே 'கொரோனா' உருவானது... மேலும் பல 'வைரஸ்கள்' உருவாக 'வாய்ப்புள்ளது...' 'ஸ்பெயின்' விஞ்ஞானிகள் பரபரப்பு 'தகவல்...'
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில், கொரோனா வைரஸ் எட்டு மாதங்களுக்கு முன்பே உருவாகி, அறிகுறி ஏதுமின்றி அமைதியாக இருந்திருக்கலாம் என, விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, டிசம்பரில், சீனாவின் வூஹான் நகரில், முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த வைரஸ், கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே, வூஹான் மக்களிடம் அமைதியாக பரவ ஆரம்பித்திருக்கலாம் என, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து, இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு, அக்டோபர்-நவம்பர் மாதங்களில், வவ்வால்களிடம் தோன்றி பரவ ஆரம்பித்திருக்கலாம். தொடர்ந்து மற்ற பிராணிகளிடமும் பரவி அசைவ உணவு மூலமாக சீன மக்களிடம் பரவியிருக்கலாம்.
இந்த வகையில், அறிகுறியின்றி அமைதியாக பரவிய கொரோனா, டிசம்பரில், திருவிழா காலத்தில் அதிக மக்கள் கூடிய போது, வேகமாக பரவி, பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வூஹான் நகரில், சீனாவின் புத்தாண்டுக் கொண்டாட்டம், குடும்ப விருந்து என்ற இரு பெரிய விழாக்களும், அவற்றில் மக்கள் அதிக அளவில் கூடியதும், கொரோனா பரவ முக்கிய காரணம் இருந்திருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வைரஸ் பாதித்த முதல் மனிதர் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், முதல் வைரஸ் ஆய்வுக் கூடங்களிலிருந்து கூட பரவியிருக்கலாம், கிராமப்புற பண்ணைகளில் பரவ ஆரம்பித்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி, கொரோனா வைரஸ் போல, மேலும் பல வைரஸ்கள் தோன்றி, பரவ வாய்ப்புள்ளது என்றும் அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
கொரோனா 'பரவலை' குறைப்பதில்... அமெரிக்கா, இத்தாலி நாடுகளை விட... 'இந்த' நாடு தான் ரொம்ப 'பெஸ்ட்'டாம்!
தொடர்புடைய செய்திகள்
- கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்!.. ஸ்தம்பித்த ரயில் நிலையம்!.. வதந்தியால் வந்த விபரீதம்!.. என்ன நடந்தது?
- ஆகஸ்ட் 3-ம் தேதி 'பள்ளிகள்' மீண்டும் திறக்கப்படும்... அதிரடியாக 'அறிவித்த' மாநிலம்!
- 'இறைச்சி' வேணாம் 'இது' மட்டும் போதும்... விரும்பி வாங்கும் 'வெளிநாட்டினர்'... கொரோனாவுக்கு நடுவிலும் 'கிடுகிடுவென' எகிறிய விலை!
- 'இந்த மருந்தை வெறும் வயித்துல...' '3 நாள் சாப்பிட்டா போதும்...' 'கொரோனா வராது...' 'நாங்க இத யூஸ் பண்றோம்...' தமிழக அரசு அறிவிப்பு...!
- 'வயிறு வலினு வந்து அட்மிட் ஆனாங்க... இப்ப இவங்க சொல்றது அதிர்ச்சியா இருக்கு'!.. கொரோனா மர்மம்!.. பெண் உயிரிழப்பால் பரபரப்பு!
- மீண்டும் 'மாயமாகி ' போன கிம்... உண்மையிலேயே 'உயிரோட' தான் இருக்கிறாரா?... வலுவான 'ஆதாரங்களை' முன்வைக்கும் வல்லுநர்கள்!
- சீனாவின் 'பீகிங்' மரபியல் 'ஆய்வுத்துறை' சார்பில் 'மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிப்பு...' '5 நாட்களில்' கட்டுப்படுத்துவதாக 'விளக்கம்...'
- 'கொரோனா தடுப்பூசி ஃபெயிலியர்...' 'டெஸ்ட் பண்ணின குரங்குகளுக்கு கொரோனா...' 'சோதனைக்கு வந்த சோதனை...' விஞ்ஞானிகள் அதிர்ச்சி...!
- நோய் தடுப்பு பணிக்காக... கட்டுப்பாடு பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கும் அரசு!.. இறுதியில் 'கொரோனா' கொடுத்த 'ட்விஸ்ட்'!.. என்ன நடக்கிறது சென்னையில்?
- 'மருந்து கண்டுபிடிக்கும் முன்பே...' 'கொரோனா வைரஸ்' தானாக 'அழிந்துவிடும்...' 'ஆறுதல் அளிக்கும் விஞ்ஞானியின் கூற்று...'