ஒரே நாளில் 'உச்சகட்ட' உயிரிழப்பு... 10000ஐக் கடந்த 'பலி' எண்ணிக்கையால்... 'நிலைகுலைந்து' நிற்கும் ஸ்பெயின்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இதுவரை இதற்கென தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதுவரை உலகம் முழுவதும் 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 950 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்முலம் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

CORONAVIRUS, SPAIN, COVID-19, DEATH, TOLL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்