'கொசுவால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்'... 'கொரோனா கட்டுப்படுவதற்குள் அடுத்தடுத்த உயிரிழப்பு'... 'பீதியில் உள்ள நாட்டு மக்கள்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினில் கொசுவால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொசு மூலமாக பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) பாதிப்பு காரணமாக இந்த ஆண்டின் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் தென் பிராந்தியமான அண்டலூசியாவின் இரண்டு நகரங்களான லா பியூப்லா டெல் ரியோ மற்றும் கொரியா டெல் ரியோ ஆகியவற்றில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை இரண்டும் குவாடல்கிவிர் ஆற்றின் (Guadalquivir River) கரையில் அமைந்துள்ளன.
இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்த 77 வயதான நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்த நிலையில், அடுத்த நாளே 82 வயதான பெண் ஒருவரும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்த இருவரைத் தவிர 23 பேர் இந்த பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் சராசரி வயது 60 எனவும், பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கொசுக்களால் பரவும் நிலையில், வெஸ்ட் நைல் வைரஸை பரப்பும் கொசுக்கள் ஆற்றின் அருகாமையில் இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. குலெக்ஸ் எனும் கொசுவால் பரவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதம் 0.1 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரஷ்யாவின் தடுப்பு மருந்துக்கு பின்னால் 'இப்படி' ஒரு ஆபத்தா!?'.. 'இதுக்கு மருந்தே பயன்படுத்தாம இருப்பது நல்லது'!.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
- 101 பேர் பலி... சென்னை உட்பட தமிழகத்தில் இன்றைய (ஆகஸ்டு 21, 2020) கொரோனா பாதிப்பு முழு விபரம்!
- 'தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆரம்பிக்கலாம்'... 'தேதியை அறிவித்த அரசு'... பெற்றோர் வர தேவையில்லை!
- “கொரோனாவுக்கு இறுதி நாள் குறிச்சாச்சு!”.. “ஆனா அதுக்கு நடுவுல, உச்சக்கு போகும்.. இவ்ளோ பேர் பாதிக்கப்படுவாங்க!”.. தேதிகளுடன் வெளியான ‘அடுத்த கட்ட’ ஆய்வு முடிவுகள்!
- கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த... 40 லட்சம் பேருக்கு உதவித்தொகை!.. மத்திய அரசு அறிவிப்பு!
- 'இந்தியாவுக்கு அடித்த சூப்பர் பம்பர் offer'!.. ரஷ்யா அதிரடி அறிவிப்பு!.. வாயடைத்துப் போன உலக நாடுகள்!
- 'இதெல்லாம் முடியறதுக்குள்ள ஏராளமான உயிரிழப்பு இருக்கு'... 'ஆனா கொரோனாவால இல்லை'... 'பில்கேட்ஸ் எச்சரிக்கை!'...
- தமிழகத்தில் இன்றும் 6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை .. 116 பேர் பலி!! முழு விபரம்!
- 'இந்த துறையில் மட்டும் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு'... 'அதுவும் இந்தாண்டு இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள மகிழ்ச்சி தரும் செய்தி!'...
- 'உலகமே தடுப்பு மருந்துக்காக காத்திருக்க'... 'நிலைகுலைய வைத்துள்ள பாதிப்பிலும்'... 'வியப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க விஞ்ஞானியின் கருத்து!'...