70 வருஷத்துக்கும் மேல நடைபெறும் தக்காளி அடிக்கும் திருவிழா.. டன் கணக்கில் இறக்கப்பட்ட தக்காளி லோடு.. சுவாரஸ்ய வரலாறு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்பெயின் நாட்டில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தக்காளி அடிக்கும் திருவிழா புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | பாசத்துல நம்மளையே மிஞ்சிடுவாங்க போலயே.. விராட் கோலிக்கு ஹாங்காங் அணியினர் கொடுத்த ஜெர்சி.. அதுல எழுதியிருந்த விஷயம் தான் செம்ம..!

திருவிழா

திருவிழாக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? உலகம் முழுவதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவற்றுள் சில வினோதமான வரலாற்றை கொண்டவை. ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நடைபெற்றுவரும் Tomatina திருவிழாவும் அந்த பட்டியலில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். டன் கணக்கில் இறக்கப்படும் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடும் இந்த திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்கள் இந்த திருவழா கொண்டாட ஸ்பெயின் அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கோலாகலமாக தக்காளி அடிக்கும் திருவிழா நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து ஸ்பெயின் நாட்டின் கிழக்கு நகரமான புனோலின் பிரதான வீதிகளில் மக்கள் திரண்டிருக்கின்றனர். அப்போது 130 டன் தக்காளிகள் ட்ரக்கில் கொண்டுவந்து இறக்கப்பட்டிருக்கிறது. கொஞ்ச நேரத்தில் பரபரப்பான மக்கள், தக்காளிகளை அள்ளி ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டனர்.

Tomatina

உடலெங்கும் தக்காளியின் சாற்றுடன் மகிழ்ந்து விளையாடிய மக்கள் செல்பிக்களையும் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த ஆண்டு தக்காளி அடி திருவிழாவில் 20,000 க்கும் மேலான பொதுமக்கள் கலந்துகொண்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. இப்படியான வினோத திருவிழாவின் வரலாறு ரொம்பவே சுவாரஸ்யமானது.

ஸ்பெயினின் இந்த பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகம். 1945 ஆம் ஆண்டில் இந்த நகரத்தை சேர்ந்த சிறுவர்கள் வீதிகளில் விளையாடிக்கொண்டிருந்த போது, எதேச்சையாக தக்காளியை கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது பெரியவர்களும் இதில் கலந்துகொண்டு தக்காளியால் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஆகஸ்டு மாத கடைசி புதன்கிழமை இந்த திருவிழா நடைபெற்றுவருகிறது. 1980 களில் இந்த திருவிழா உலக முழுவதும் பிரபலமானது. தற்போது உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள ஆர்வம்காட்டி வருகின்றனர்.

Also Read | "ரோடு ஃபுல்லா தக்காளி மட்டும் தான்".. அமெரிக்காவில் நேர்ந்த பரிதாபம்!!.. "மொத்தமா 1.5 லட்சத்துக்கும் மேலயாம்"

SPAIN, SPAIN TOMATINA BATTLE, TOMATO FIGHT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்