"அந்த கடலுக்கு கீழ 710 கப்பல்கள் இன்னும் இருக்கு".. அதிபருக்கு கிடைச்ச தகவல்..அது மட்டும் கிடைச்சுட்டா இனி உலகத்தின் பணக்கார நாடு இதுதான்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய புதையலை தேடும் பணியில் இறங்கியுள்ளது ஸ்பெயின் நாடு. இதற்காக ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பல் ஒன்றை வாங்க இருக்கிறது ஸ்பெயின்.

Advertising
>
Advertising

Also Read | உலகத்தின் மிகப்பெரிய செடி.. அதுவும் கடலுக்குள்ள.. அடேங்கப்பா இவ்வளவு கிலோமீட்டருக்கா வளந்திருக்கு.!

கடல் எப்போதுமே பல ஆச்சர்யங்களை தன்னிடத்தே கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடல் பற்றிய புதுப்புது தகவல்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இதனிடையே கடலில் பல்லாண்டுகளுக்கு முன்பாக மூழ்கிப்போன கப்பல்கள், அதில் உள்ள பொக்கிஷங்கள் குறித்து ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது பல நாடுகள். பல தனியார் அமைப்புகளும் பெருங்கடல்களை சல்லடை போட்டு சலித்துவருகின்றன. இந்நிலையில், ஸ்பெயின் புதிய ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பல் ஒன்றை வாங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

கடலுக்குள் இருக்கும் பொக்கிஷங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்னதாக மூழ்கிப்போன கப்பல்களில் ஏராளமான தங்க, வெள்ளி மற்றும் மரகத நாணயங்கள் இன்றும் ஸ்பெயினின் கடலில் இருப்பதாக நம்பப்படுகிறது. கியூபா, பனாமா, டொமினிகன் குடியரசு, ஹைட்டி, பெர்முடா, பஹாமாஸ் மற்றும் அமெரிக்க அட்லாண்டிக் கடல் பகுதியில் 710 கப்பல்கள் விபத்தில் மூழ்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவற்றுள் பாதி கப்பல்கள் லத்தீன் அமெரிக்கப் பேரரசிலிருந்து ஸ்பெயினுக்குப் பயணம் செய்தபோது, மோசமான வானிலை, பாறைகளில் மோதி அல்லது கடற்கொள்ளையர் தாக்குதல்கள் காரணமாக மூழ்கிப்போனவை. இதுதான் ஸ்பெயினின் இலக்கு.

தேடுதல் வேட்டை

கடலுக்கடியே புதைந்துள்ள இந்த பொக்கிஷங்கள் கண்டறிய ஸ்பானிய பாதுகாப்பு அமைச்சகம் புதிய திட்டத்தில் இறங்கியுள்ளது. அதிபரின் உத்தரவின்படி, 192 மில்லியன் யூரோ செலவில் ஆழ்கடல் தேடுதல் வெஸ்ஸலை (Underwater Intervention Maritime Action Vessel) வாங்க இருக்கிறது ஸ்பெயின். இது இந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கப்பலில் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் ரோபோக்கள் மற்றும் பிரத்யேக சோனார் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு சிதைவுகளைக் கண்டறிய உதவும். மேலும், விபத்தில் சிக்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடலில் மிதக்கும் ஊழியர்களின் உடல்களை மீட்கவும் இந்த கப்பல் உதவும் என ஸ்பெயின் பாதுகாப்புத்துறை அறிவித்திருக்கிறது.

உதவி

ஸ்பெயின் அரசாங்கத்துடன் பணிபுரியும் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கார்லோஸ் லியோன்," இந்தக் கப்பல் சிதைவுகளைக் கண்டறிவதற்கும், தேவைப்பட்டால் விபத்தில் சிக்கிய மக்களை மீட்கவும் உதவும். டிராஃபல்கர் போரில் தொலைந்து போன கப்பல்களைக் கண்டறிந்தபோதுதான் ஸ்பானிய கடற்படை கடைசியாக எங்களுக்கு உதவி செய்தது" என்றார்.

2007 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் புதையல் தேடல் நிறுவனமான ஒடிஸி மரைன் எக்ஸ்ப்ளோரேஷன் தெற்கு போர்ச்சுகல் கடலில் மூழ்கியிருந்த ஸ்பெயின் கப்பலான நியூஸ்ட்ரா செனோரா டி லாஸ் மெர்சிடஸ்-ல் இருந்து 17 டன் தங்கத்தைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயினின் ஆழ்கடல் புதையல் மீட்பு திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் அந்நாடு உலக அளவில் மிகவும் வளமான நாடாக அறியப்படும்.

Also Read | மொத்த பழங்குடிக்கும் ராஜா.. ஆனாலும் இப்படி ஒரு நிலைமை.."எல்லாம் என் மக்களுக்காக தான்".. கலங்கவைக்கும் பின்னணி..!

SPAIN, SHIP, SUNKEN TREASURE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்