உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா துயரத்திலும்... 'நம்பிக்கை' கொடுக்கும் 'மனிதர்கள்'... 'நெகிழவைக்கும்' சம்பவம்!...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதையும் கொரோனா பாதிப்புகள் உலுக்கிவரும் வேளையில் ஸ்பெயினில் நடந்த ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்பெயினில் டாக்சி ட்ரைவர் ஒருவர் கொரோனா அச்சுறுத்தலிலும் நோயாளிகளை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கும், குணமடைபவர்களை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கும் கொண்டு செல்வதை ஒரு இலவச சேவையாக செய்து வருகிறார். இதையடுத்து வழக்கம்போல மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை அழைத்து செல்ல வேண்டுமென அவருக்கு அழைப்பு வந்துள்ளது.

அதை ஏற்று அவர் மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கைதட்டி ஆரவாரம் செய்ததுடன் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கான காசோலையையும் அவருக்கு அளித்துள்ளனர். மேலும் அவருடைய கொரோனா பரிசோதனை முடிவையும் அளித்துள்ளனர். அதில் அவருக்கு பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஸ்பெயினின் மேட்ரிட் நகர டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 11 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்போதுவரை ஸ்பெயினில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 82000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்