"மொத்த ஊரும் 2 கோடி ரூபாய்க்கு".. 30 வருசமா ஆளே இல்லாத கிராமம்.. மலைக்க வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகத்தில் நம்மை சுற்றி இருக்கும் பல இடங்கள் குறித்த தகவல், அவ்வப்போது நமக்கு தெரிய வந்து ஒரு வித வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.
Also Read | இளம்பெண்ணைக் கொன்று.. சமூக வலைத்தளத்தில் வீடியோ பகிர்ந்த வாலிபர்..!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!
உண்மையில் அந்த இடம் பற்றிய தகவல் நமக்கு தெரியும் போது இப்படி ஒரு இடம் இருக்கிறதா என்ற அளவுக்கு நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும்.
அந்த வகையில் தான் தற்போது ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள கிராமம் குறித்து தெரிய வந்துள்ள தகவல்., நெட்டிசன்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் ஜமோரா என்னும் மாகாணத்தில், போர்ச்சுகல் நாட்டின் எல்லையை ஒட்டி Salto De Castro என்ற கிராமம் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, கடந்த 1950 களில் இந்த பகுதியில் நீர்த்தேக்கம் ஒன்று உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அந்த சமயத்தில் இங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக இடம் ஒன்று உருவாக்கப்பட்டது. அப்படி சால்டோ டி காஸ்ட்ரோ என்ற இந்த கிராமம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை Iberdrola என்ற நிறுவனம் உருவாக்கியதாக கூறப்படும் நிலையில், மொத்தம் இந்த கிராமத்தில் 44 வீடுகள், ஒரு நீச்சல் குளம், காவலர்கள் தங்குவதற்கான இடம் ஒரு சர்ச் மற்றும் பள்ளிக்கூடம் உள்ளிட்டவை இருந்துள்ளது.
இந்த கிராமத்தில், 1950 முதல் 1980 வரை மக்கள் வசித்து வந்துள்ளனர். அதன் பின்னர் இங்கே யாரும் வசிக்கவில்லை என தெரிகிறது. அவ்வப்போது யாராவது இங்கே வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த இடத்தை வாங்கிய நபர், சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தை ஒரு சுற்றுலா தலமாக மாற்ற விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், அதற்கான செலவு அதிகமான காரணத்தினால் இதனை பாதியிலேயே அந்த நபர் கைவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இப்படி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் அதிக ஆள் நடமாட்டமே இல்லை என்றும் தெரிகிறது.
இந்த நிலையில், தற்போது சால்டோ டி காஸ்ட்ரோ கிராமம் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம், இந்த ஒட்டு மொத்த கிராமமும் தற்போது விற்பனைக்கு உள்ளது தான். இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு இந்த கிராமமே விற்பனைக்கு உள்ள நிலையில், இதுவரை பலரும் வாங்க விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.
மிகக் குறைந்த விலைக்கு ஒரு கிராமமே இருந்தாலும் இதனை வாங்கும் நபருக்கு ஒட்டுமொத்தமாக இதனை மீண்டும் புனரமைக்க அதிக பணம் செலவாகும் என்றும் தெரிகிறது. கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அதிகம் வாழாத ஒரு கிராமம், 2 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ள தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Non Vegக்கு நோ.. "மீறி சாப்பிட்டா இதான் கதி".. காலம் காலமா Follow பண்ணும் கிராமம்!!
- "ஊர்'னா இப்படி இருக்கணும்".. 40 வருசமா ஒரு போலீஸ் கேஸ் கூட இல்லையாம்.. இதுக்காக அவங்க Follow பண்ற விஷயம் தான் அல்டிமேட்
- "அந்த 1:30 மணி நேரம், TV, செல்போன்'னு எதையும் Use பண்ண கூடாது".. அதிரடி நடைமுறையை Follow பண்ணும் கிராமம்.. காரணம் இது தான்!!
- "கரெக்ட்டான Flight தான்.. ஆனா தப்பான நாட்டுல தரையிறங்கிடுச்சு".. பயணிகளுக்கு வந்த சந்தேகம்.. அதிகாரிகள் சொல்லிய பகீர் பதில்..!
- "வயல்'ல தோண்டுறப்போ கெடச்ச சாமி சிலை'ங்க இது".. பயபக்தியுடன் தொழுது காணிக்கை போட்ட மக்கள்.. "உண்மை தெரிஞ்சதும் ஊரே நடுங்கி போச்சு"
- 70 வருஷத்துக்கும் மேல நடைபெறும் தக்காளி அடிக்கும் திருவிழா.. டன் கணக்கில் இறக்கப்பட்ட தக்காளி லோடு.. சுவாரஸ்ய வரலாறு..!
- இந்தியாவின் யூடியூப் கிராமம்.. தொழிலே வீடியோ மேக்கிங் தானாம்.. இப்படியும் ஒரு ஊரா..?
- உலகத்திலயே 'Unlucky' ஆன மனுஷன் இவரு தான் போல".. சோதனை முடிவில் தெரிய வந்த அதிர்ச்சி.. "ஒரே நேரத்துல இவ்ளோ பிரச்சனையா??"
- வெளிநாட்டுக்கு டூர் போன தம்பதி.. திரும்பி வந்ததும் காத்திருந்த கடிதம்.. "நாங்க வெளியூர்'ல இருக்குறப்போ இது எப்படி நடந்துச்சு??"
- வரலாறு காணாத 'வறட்சி'.. தண்ணி வற்றியதும் வெளியே தெரிஞ்ச உண்மை.. "உள்ளூர் ஆளுங்க பார்த்து மிரண்டு போய்ட்டாங்க"