'ஸ்பெயின் மக்களை கதறவைக்கும் கொரோனா!'... அழுகுரல் ஓய்வதற்குள்... அடுத்த சிக்கல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்பெயின் நாட்டை சூறையாடி வரும் கொரோனா வைரஸ், தற்போது அந்நாட்டின் துணை பிரதமரையும் தாக்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக மக்களை அச்சுறுத்தி, வீட்டிற்குள் அடைபட வைத்த கொடிய கொரோனா வைரஸ், 19 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை கொன்று குவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், தற்போது சீனாவை விட பிற நாடுகளை கடுமையாக பாதித்துவருகிறது. இதில், இத்தாலி பரிதாப நிலையை அடைந்துள்ளது. அதற்கு அடுத்த படியாக, சீனாவை மிஞ்சிக் கொண்டு சோக நிலைக்கு ஸ்பெயின் நாடு சென்றுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,647 ஆக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்கொண்டு உலக அளவில் இரண்டாவது இடத்திற்கு ஸ்பெயின் நகர்ந்துள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து ஸ்பெயின் அரசு தெரிவிக்கையில், துணை பிரதமரான கர்மேன் கால்வோவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், அவர் தற்போது நலமாக உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்