10 நாள் விண்வெளிக்கு சுற்றுலா சென்றுள்ள 3 தொழிலதிபர்கள்..கட்டணம் எவ்வளவு தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள் 3 தொழிலதிபர்கள்.

Advertising
>
Advertising

சுற்றுலா

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட் நேற்று அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து தனது பயணத்தை கிளம்பியது. இதில், ஒரு முன்னாள் விண்வெளி வீரரும் 3 தொழிலதிபர்களும் விண்வெளிக்கு சென்றுள்ளனர். இவர்கள் பூமியின் தாழ்வு சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று காலை சென்றடைந்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட்டப் நிறுவனமான Axiom ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.

தொழிலதிபர்கள்

இந்த பயணத்தில் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் ஜாம்பவானான லாரி கானோர் (Larry Connor) -ம் இணைந்திருக்கிறார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவரான இவருடைய சொத்து மதிப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதேபோல, இவருடன் கனடாவை சேர்ந்த தொழிலதிபரான மார்க் பதி (Mark Pathy) மற்றும் இஸ்ரேலை சேர்ந்த தொழிலதிபரும் முன்னாள் போர் விமானியுமான எய்டான் ஸ்டிப்பே ஆகியோரும் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

தலைமை

இந்த பயணத்தை நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான லோபஸ்-அலெக்ரியா வழிநடத்துகிறார். 63 வயதான லோபஸ் 1995 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் நாசாவில் பணிபுரிந்துவந்தார். இந்த காலத்தில் 4 முறை விண்வெளி பயணத்தை இவர் மேற்கொண்டிருக்கிறார்.

விண்வெளி பயணத்தில் அனுபவம் நிறைந்த லோபஸ் இந்த தொழிலதிபர்களுடனான பயணத்தை ஒருங்கிணைப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டணம் எவ்வளவு?

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 10 நாட்களுக்கான சுற்றுலாவுக்கு இந்த தொழிலதிபர்கள் தலா 55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்தி உள்ளனர். Axiom நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும்  திட்டம் குறித்து கடந்த சில வருடங்களாகவே ஈடுபட்டு வந்தது. அதன் அடிப்படையில் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக துவங்கி இருக்கிறது Axiom நிறுவனம்.

SPACEX, NASA, AXIOM, ISS, விண்வெளி, சுற்றுலா, நாசா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்