'சார் நீங்க தான் இப்போ உலகத்திலயே no.1 பணக்காரர்'!.. தகவல் சொன்னதும்... எலான் மஸ்க்-இன் வைரல் ரிப்ளை!.. சாதித்தது எப்படி?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடம் பிடித்தார்.

டெஸ்லா இன்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க்  உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான உயர்வு, மஸ்க்கை  அமேசான்.காம் இன்க் நிறுவனத்தை விடவும் முந்திக்கொண்டு பணக்காரராக உயர்த்தியது.

இந்த தகவல்கள் உலகின் 500 செல்வந்தர்களின் தரவரிசையை வெளியிட்டுள்ள ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த பொறியாளரான எலோன் மஸ்கின் நிகர மதிப்பு நியூயார்க்கில் காலை 10:15 மணிக்கு 188.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அக்டோபர் 2017 முதல் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை வகித்துவரும் பெசோஸை விட 1.5 பில்லியன் டாலர் அதிகம்.

டெஸ்லாவின் பங்கு விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிவேக வளர்ச்சியில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743% உயர்ந்தது.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் எலான் மஸ்க்கிடம் சொன்ன போது, அவர் ட்விட்டரில் கூறிய ரிப்ளை வைரல் ஆகிவருகிறது.

அவர் கூறியதாவது, "அப்படியா... ஆச்சரியமாக உள்ளது... சரி, நாம் வேலையை பார்ப்போம்" என்று சிம்பிளாக முடித்துவிட்டார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்