எலான் மஸ்க்கின் கனவுத் திட்டம்..டெஸ்ட் பண்ணப்போ வெடிச்ச ராக்கெட் பூஸ்டர்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்-ற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பூஸ்டர் ஒன்று வெடித்துச் சிதறிய வீடியோ உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | ஆச்சர்யமா இருக்கே.. அருவியில் இருந்து மேலே செல்லும் தண்ணீர்..ஓஹோ இதான் காரணமா?.. IFS அதிகாரி பகிர்ந்த வீடியோ..!

எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

கனவுத் திட்டம்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் வகையில் அதிநவீன ஸ்டார் ஷிப் எனப்படும் விண்கலத்தை தயாரித்துவருகிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்நிலையில், இந்த விண்கலத்துக்கான பூஸ்டர் பரிசோதனையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் பூஸ்டர் 7 பரிசோதனை நடைபெற்றது. அப்போது, திடீரென அடிப்பாகத்தில் இருந்து புகை கிளம்பியது. சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் பூஸ்டர் வெடித்துச் சிதறியது.

கடந்த ஆண்டுகளில் பூஸ்டர் மாதிரிகளை அந்நிறுவனம் பரிசோதித்து வந்தது. இதுவரையில் 4 முறை இந்த பூஸ்டர் மாதிரிகள் விபத்தை சந்தித்திருக்கின்றன. இந்த ஆண்டு ஸ்டார் ஷிப் பணிகள் முடிவடையும் என எலான் தெரிவித்திருந்த நிலையில், இன்று பூஸ்டர் 7 மாதிரி வெடித்துச் சிதறியிருப்பது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்வீட்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இந்த பூஸ்டர் விபத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதில் கமெண்ட் செய்துள்ள எலான் மஸ்க்," ஆம். இது உண்மையில் நல்லதல்ல. குழு சேதத்தை மதிப்பிடுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் அவை சரிசெய்யப்படும் எனவும் ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்திருக்கிறது.

எலான் மஸ்க்கின் ஸ்டார் ஷிப் பூஸ்டர் மாதிரி பரிசோதனையின் போது வெடித்துச் சிதறிய வீடியோ உலக அளவில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | "இடி இடிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு.. அப்போதான் வானத்துல அதை பார்த்தோம்.." அதிகாலையில் நடந்த சம்பவத்தால் அலறிய பொதுமக்கள்..!

ELON MUSK, SPACEX BOOSTER ROCKET, FIREBALL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்