'தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மாஸ்க் போட வேண்டாம்'... 'அதிரடியாக அறிவித்த நாடு'... உற்சாகத்தில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் என்பதைப் பல நாடுகள் தீவிரமாக வலியுறுத்தி வருகிறது.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து 15 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஜூலை மாதத்திலிருந்து மாஸ்க் அணியத் தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் எடுத்துக்கொண்டாலும் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இத்தகைய அறிவிப்பை தென்கொரியா வெளியிட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதேபோல், ஜூன் மாதத்திலிருந்து ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட்டமாகக் கூட அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5.2 கோடி மக்கள் தொகை கொண்ட தென்கொரியாவில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 70 சதவீதம் பேருக்குத் தடுப்பூசி போட்டு விட வேண்டும் என தென்கொரியா திட்டம் வகுத்துள்ளது. தற்போது அந்நாட்டில் வெறும் 7.7 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
70 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, தனிமைப்படுத்தலுக்கான விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் அந்நாட்டு அதிபர் கிம் பூ கியும் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 707- பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 37 ஆயிரமாக உள்ளது. தொற்று பாதிப்பால் 1,940- பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வீட்டிலிருந்தே ‘வீடியோ கால்’ மூலம் டாக்டரிடம் இலவச ஆலோசனை.. சென்னை மாநகராட்சி ‘சிறப்பு’ ஏற்பாடு..!
- கொரோனாவால் இறந்தவர் மூலம் நோய் தொற்று ஏற்படுமா..? ஓராண்டு நடந்த ஆய்வு.. எம்ய்ஸ் புதிய தகவல்..!
- 'இந்த நாடுகளுக்கு எல்லாம் போக வேண்டாம்'... 'லிஸ்டில் இருக்கும் நாடுகள்'... அமெரிக்கா எச்சரிக்கை!
- 'எங்க கம்பெனியில வொர்க் பண்றவங்க...' 'யாராச்சும் கொரோனாவால இறந்துட்டாங்கன்னா...' 'அவங்களோட 60 வயது வரை முழு சம்பளத்தை கொடுப்போம்...' - சலுகைகளை அறிவித்த 'பிரபல' கம்பெனி...!
- கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிடுது...! 'ஆள் பக்கத்துல போனாலே கொரோனா இருக்கா? இல்லையான்னு சொல்லிடும்...' எப்படி கண்டுப்பிடிக்குது...? - ஆராச்சியாளர்கள் தகவல்...!
- நாங்க 'விசாரணைய' இன்னும் தீவிரப்படுத்துவோம்...! 'எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது...' கொரோனா 'அங்க' இருந்து தான் பரவிச்சு...! - அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்...!
- பறந்து பறந்து கல்யாணம்...! 'விமானத்தை கல்யாண மண்டபமாக்கிய ஜோடி...' - எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் விமான ஊழியர்களுக்கு கெடச்ச 'ஷாக்' தகவல்...!
- முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு Martin Group உதவி!
- தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை!.. ஒரே இரவில்... ராக்கெட் வேகத்தில் உயர்வு!.. எப்படி நடந்தது?
- BREAKING: தமிழகத்தில் ஒரு வாரம் 'தளர்வுகளற்ற' முழு ஊரடங்கு...! 'தமிழக அரசு அறிவிப்பு...' - முழு விவரங்கள்...!