பிறந்து ‘27 நாள்களே’ ஆன குழந்தைக்கு கொரோனா.. ஆனா எந்த சிகிச்சையும் கொடுக்காமல் குணமடைந்த ‘ஆச்சரியம்’.. எப்படி தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தை ஒன்று மருத்துவ சிகிச்சைகள் ஏதுமின்றி தாய்பால் மட்டுமே குடித்து குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவில் பிறந்து 27 நாள்கள் ஆன பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை கொரோனாவுக்கென்று பிரத்யேக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பிற நோய்களுக்கான மருந்துகள் மூலம்தான் கொரோனா குணப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிறந்து 27 நாள்களே ஆன குழந்தைக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என அந்நாட்டு மருத்துவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். அதன்படி 3 வாரங்களுக்கு குழந்தைக்கு தாய்பால் தவிர வேறு எதுவும் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் வேறு எந்த சிகிச்சையோ, மருந்துகளோ குழந்தைக்கு கொடுக்கப்படவில்லை.
இதனை அடுத்து 20 நாட்கள் கழித்து குழந்தைக்கு பரிசோதனை செய்துள்ளனர். அதில் கொரோனா நெகட்டீவ் என வந்துள்ளது. வெறும் தாய்ப்பால் மூலமே குழந்தை குணப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த முறை மற்றவர்களுக்கு பொருந்தாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி தனித்தன்மை கொண்டது என அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 5 வருட 'ரகசிய' திட்டம்... அமெரிக்கா 'அசந்த' நேரம் பார்த்து... அடிமடியில் 'கைவைத்த' சீனா?
- ”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்?” - உலக அரசியல் ஆய்வாளர்கள்!
- வெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்?
- குன்றத்தூர்: 'மருத்துவமனைக்கு' கொண்டு செல்லும்போது 'உயிரிழந்த' 36 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி!'
- 10 லட்சத்தை 'நெருங்கும்' பாதிப்பு... 'வரலாறு' காணாத உயிரிழப்புக்கு நடுவே... ஊரடங்கை மீறி கடற்கரையில் 'குவிந்த' மக்கள்...
- 'உலுக்கி' எடுக்கும் கொரோனா... ஸ்பெயினில் 'மோசமான' பாதிப்பு 'எதனால்?'... ஆய்வில் வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' காரணங்கள்...
- அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம்!?.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு!.. வட கொரியாவில் உச்சகட்ட பரபரப்பு!
- '24 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 64 பேருக்கு கொரோனா!'.. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
- “முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு!”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி!'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி!
- கொரோனா 'இல்லாத' நகரமானது... அனைத்து நோயாளிகளும் 'குணமடைந்து' டிஸ்சார்ஜ்... 'பெருமையுடன்' அறிவித்த 'சீனா'...