'பொண்ணுக்கு கடைசி'யா ஒரு 'மெசேஜ்'... மாயமான மேயர்... '7 மணி' நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சடலமாக மீட்பு...! - நாட்டின் சக்தி வாய்ந்த தலைவருக்கு நேர்ந்த துயரம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலில் மேயராக பதவி வகிப்பவர் பார்க் ஒன் சூன். 64 வயதான இவர், தென்கொரியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார்.

அதே போல அடுத்தாண்டு தென்கொரியாவில் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்தார். இந்நிலையில், நேற்று காலை தனது வீட்டில் இருந்து வெளியில் சென்ற பார்க், மீண்டும் வீடு திரும்பவில்லை. வீட்டை விட்டு வெளியில் சென்ற பார்க், தனது மகளுக்கு மட்டும் கடைசியாக ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். தொடர்ந்து அவரது மகள், தந்தையின் எண்ணிற்கு அழைத்த நிலையில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார்.

பார்க் காணாமல் போன தகவல் தென் கொரியா முழுவதும் கடந்த அதிர்ச்சி அலைகளை எழுப்பிய நிலையில் அவரது மொபைல் சிக்னல் கடைசியாக சியோலில் உள்ள மலைப்பகுதியில் கிடைத்துள்ளது. அதனால் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். தேடுதல் பணியில் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 600 பேர், மோப்ப நாய்கள், ட்ரோன் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுன.

அந்த மலைப் பகுதியில் சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட தேடுதலின் இறுதியில் பார்க் சடலமாக மீட்கப்பட்டார். இந்த தகவல், மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, நேற்று அலுவலகம் செல்லாத பார்க், நடைபெறவிருந்த அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்துள்ளார்.

அதே போல, சில தினங்களுக்கு முன் மேயரின் பெண் செயலாளர் ஒருவர் பார்க் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததாக சியோல் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் இதன் பிறகு தான் பார்க் காணாமல் போயுள்ளார். தொடர்ந்து குடும்பத்தினருக்கு கடிதம் ஒன்றையும் பார்க் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார். 'அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என் வாழ்வில் என்னுடன் இருந்து உதவிய அனைவருக்கும் நன்றி. என்னால் கடும் வேதனை அனுபவிக்கும் என் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்