மாஸ்க் இல்ல.. இதுக்கு பேரே வேற.. எப்படியெல்லாம் யோசிக்குறாய்ங்க இந்த ஊரு‌ காரய்ங்க

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலையை எதிர்நோக்கும் சூழல் தற்சமயம் உலகெங்கும் நிலவுகிறது.
இந்த நோய்த்தொற்று காலங்களில் பல்வேறு முன்னணி நாடுகள் பல்வேறு பொருளாதார சிக்கலையும், பல உயிர் சேதங்களையும், அனைத்து நாடுகளும் எதிர்கொண்டு வருகின்றன.

Advertising
>
Advertising

"பணம் இருக்குப்பே பதவி வேணுமுல்ல".. 94 வயதில் கவுன்சிலர் கனவு.. யார் இந்த வியப்பில் ஆழ்த்தும் வொண்டர் வுமன்?

அந்த நிலையில் தடுப்பூசிகள், ஊரடங்கு கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது.

நோய்த் தொற்றின் ஆரம்ப காலக்கட்டங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற சூழல் நாடுமுழுவதும் நிலவி வந்தது. அந்த நிலையில் மாஸ்க் அணிவதை பல விதமாகவும், மேலும் மாஸ்க்கையே பல விதமாகவும் பல வண்ணங்களிலும் அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டது.


இன்றளவும் மாஸ்க் அணிவது கட்டாயம் என சில நாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கு மற்றும் வாய் இரண்டையும் மறைத்தவாறு அணியவேண்டும் அப்போதே நோய்த்தொற்று  தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் அதனை பின்பற்றும் வகையில் மாஸ்க் உற்பத்தி இருந்து வந்தது.

மாஸ்க் உற்பத்தியில் சற்று வித்தியாசத்தை கொண்டுவந்துள்ளது தென்கொரியா. அங்குள்ள சியோல் பகுதியில் மூக்கை மட்டும் மறைக்கும் தன்மையுடைய மாஸ்க்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்த வைரஸ் பாதிப்பானது உலக நாடுகளை இன்னலுக்கு உள்ளாக்கும் நிலையில் பல வல்லரசு நாடுகளும் இவற்றை கட்டுப்படுத்த மிகவும் முயற்சி செய்து வருகின்றன.

இன்னும் சில காலங்கள் நம்முடனே இந்த வைரஸ் பயணம் செய்யும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருவதால் இவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்ற நிலை உள்ளது. நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு தடுப்பூசி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு மாஸ்க்கும் முக்கியம் என்று சூழல் உள்ள நிலையில், தென்கொரியாவில் அறிமுகமாகியுள்ள மூக்கை மட்டும் மறைக்கும் மாஸ்க் அப்பகுதியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இவை தென்கொரியாவின் அட்மின் என்ற நிறுவனம்தான் இந்த புதிய வடிவம் மாஸ்க்கை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மாஸ் அணிவதால் சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கும்போதும் மாஸ்க்கை கழற்ற வேண்டும் என்பதால் அந்த சிரமத்தை குறைக்கும் வகையில் மூக்கை மட்டும் மறைக்கும் மாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இனி சாப்பிடும்போதும், தண்ணீர் அருந்தும் போதும், மாஸ்க்கை கழட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய வகை மாட்டிற்கு தென்கொரியாவில் கோஸ் என்ற பெயரில் அழைக்கின்றனர்.
கொரியா மொழியில் என்றால் "மூக்கு" என்று அர்த்தமாம். புதியவகை மாஸ்க்குகள் மூக்கை மட்டும் மறைப்பதால் இதனை கோஸ்க் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மூக்கின் வழியாகவே வைரஸ் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளதால், தென் கொரியா மக்கள் கோரிக்கை ஆர்வமுடன் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.இது விரைவில் நாடு முழுவதும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என் புருஷன் வீட்ல இல்ல.. வெளியூர் போன நேரம் பார்த்து.. மனைவி எடுத்த முடிவினால்.. உடைந்து நொறுங்கிய கணவன்

SOUTH KOREA, MASK, NEWLAUNCH, கொரோனா, தென்கொரியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்