ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசல்.. திடீர் நெஞ்சுவலியால் விழுந்த நூற்றுக்கணக்கானோருக்கு சாலையில் வைத்து 'CPR' முதலுதவி... நடுங்க வைக்கும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தென் கொரியா நாட்டில் ஹாலோவீன் திருவிழாவில், ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் கூடி இருந்த நிலையில், கூட நெரிசலில் சிக்கி பல பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

ஹாலோவீன் (Halloween) பண்டிகை என்பது பல உலக நாடுகளில் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இட்டவோன் என்னும் நகர் அமைந்துள்ளது. இங்கே ஒவ்வொரு வருடமும் ஹாலோவீன் திருவிழா நடப்பது வழக்கம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல, கொரோனா தொற்று காரணமாக ஒரு சில ஆண்டுகள் இங்கே விழா நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், கொரோனா தொற்று காலத்திற்கு பின்னர் முகக்கவசம் இன்றி ஹாலோவீன் திருவிழாவில் கூடலாம் என்றும் அனுமதி வழங்கப்படிருந்ததால் ஏரளமான மக்கள் கூடி இருந்தனர்.

மேலும் முகக்கவசம் இன்றி பங்கேற்க அனுமதி என இருந்ததால், 1 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டதால் அந்த இடமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. இதற்கு மத்தியில், ஒரு பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசல் உருவாகி கூட்டத்திற்கு இடையே மக்கள் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இதனால், உள்ளே சிக்கிக் கொண்ட மக்கள் பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக, 155 க்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்த நிலையில், 150 க்கும் மேற்பட்டோர் வரை காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் கூட்டத்தில் நசுங்கியும், மூச்சுத் திணறல் ஏற்பட்டும் ஏராளமானோர் உயிரிழந்ததாக வைரலாகி வரும் வீடியோக்கள் தெரிவிக்கின்றது. தொடர்ந்து மீட்புப் பணிகள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் இன்னும் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற அச்சமும் அப்பகுதியில் நிலவி வருகிறது.

ஹாலோவீன் திருவிழா காரணமாக தென் கொரிய நாட்டில் ஏற்பட்டுள்ள சம்பவம், உலக நாடுகள் மத்தியிலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்ட நபர்களுக்கு சாலை ஓரத்திலேயே CPR கொடுக்கப்பட்டதாக வைரலாகி வரும் தகவல், சியோல் பகுதியில் உள்ள மோசமான நிலையை எடுத்துரைப்பது மட்டுமில்லாமல், பலரையும் கடும் பீதியிலும் உறைய வைத்துள்ளது. இது தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கூட அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SEOUL, HALLOWEEN, PEOPLE, CPR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்