தென் கொரியாவில் பரபரப்பு!.. தடுப்பூசி போடப்பட்ட 25 பேர் மரணம்!.. அடுத்தடுத்த திருப்பங்களால்... மருத்துவர்கள் 'அதிரடி' அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்தென்கொரியாவில் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் பரிதாபமாக மரணமடைந்த நிலையில், மருத்துவர்கள் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவில் பருவ காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். இந்த விவகாரம் அங்கு பெரும் சோகத்தையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தென்கொரிய அரசு அதிகாரிகள் கூறும்போது, 'தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இறந்ததாக கூறப்படுகிற 9 சந்தேக மரணங்கள் குறித்து விசாரித்தோம்.
அதில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும், உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என தெரிய வந்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட தீவிர ஒவ்வாமை எதிர்வினையால் இறப்பு நேர்ந்திருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை' என தெரிவித்தனர்.
பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் உள்ளூர் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை எனவும், ஒரே ஒரு பிரான்ஸ் நிறுவனம் மட்டும் தென் கொரியாவுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில் மரணமடைந்த 25 பேர்களில் நால்வருக்கு மட்டுமே பிரான்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் தொடர்புடைய நான்கு உள்ளூர் நிறுவனங்களும் தங்கள் கருத்தை வெளியிட மறுத்துள்ளது.
காய்ச்சலுக்கான தடுப்பூசியை வழங்கிவந்த இந்த 5 நிறுவனங்களும் மொத்தமுள்ள 5.2 கோடி மக்கள் தொகையில் 3 கோடி மக்களுக்கும் இலவசமாகவும் கட்டணத்திற்கும் தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது.
மேலும், அக்டோபர் 13 முதல் சுமார் 83 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 350 பேர்களுக்கு மட்டும் ஒவ்வாமை ஏற்படவே, அவர்களை கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், எஞ்சிய பேர்களுக்கு தடுப்பூசி போடுவதை அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா சிகிச்சையில்'... 'அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து!!!'... 'முழு அனுமதி வழங்கிய FDA!'...
- கொரோனா தடுப்பூசி குறித்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'அதிரடி' அறிவிப்பு!.. "வைரஸ் பற்றி தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதால்"... இந்த முடிவு!?
- 'எப்படியாவது இந்த கொரோனாவ ஒழிச்சா போதும்'... 'பெரும் Risk-ஐ கையிலெடுக்கும் நாடு!!!'... 'கண்டிப்பாக பலனளிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை!'...
- ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசிகள் எப்போது ‘பயன்பாட்டுக்கு’ வரும்?.. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி தகவல்!
- சைலண்டாக இருந்து... சாதித்துக்காட்டிய தமிழகம்!.. 'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' மொமண்ட்!.. வெளியான 'சூப்பர் டூப்பர்' தகவல்!
- 'பெரிதும் எதிர்பார்க்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி'... 'எந்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்???' - வெளியான அதிரடி அறிவிப்பு!!!
- 'உலகின் 2வது கொரோனா தடுப்பூசியும் Ready!!!'... '3வது தடுப்பூசியும், அதிவிரைவில்??!'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள'... 'அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்!...
- எங்களோட மெயின் நோக்கமே 'அது' தான்...! 'இப்போ 12 வயசு குழந்தைகளை வச்சு டெஸ்ட் பண்றோம்...' - குட் நியுஸை வெளியிட்ட பிஃபிஸிர்ஸ் கொரோனா தடுப்பூசி நிறுவனம்...!
- 'நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள்'... 'எப்போது பயன்பாட்டுக்கு வரும்???'... 'மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ள மகிழ்ச்சி செய்தி!'...
- "இந்த தடுப்பூசிதான்... முதல்ல வரப்போகுதுனு நினைச்சோம், ஆனா...?!!" 'இந்தியா போட்ட தடையால்'... 'ரஷ்ய தடுப்பூசிக்கு வந்த பின்னடைவு!!!'