திடீர்னு பச்சை கலர்ல மாறுன வானம்.. ஆச்சர்யமா இருக்கேன்னு நினைச்ச மக்களுக்கு கொஞ்ச நேரத்துல காத்திருந்த அதிர்ச்சி.. எச்சரித்த ஆராய்ச்சியாளர்கள்.. வைரலாகும் வீடியோ.!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் திடீரென வானம் பச்சை நிறத்தில் காட்சியளித்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | என்ன மனசு சார் உங்களுக்கு.. NFT மூலமாக கிடைச்ச கோடிக்கணக்கான பணம்.. ஜானி டெப் வெளியிட்ட அறிவிப்பால் நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்..!

வானம் எப்போதுமே நம்ப முடியாத பல ஆச்சர்யங்களை நமக்கு அளிக்கக்கூடியது. அதுவே சில நேரங்களில் நம்மை மிரள வைக்கவும் செய்துவிடும். அந்த வகையில் கடந்த செவ்வாய்க் கிழமை அமெரிக்காவில் திடீரென வானம் பச்சை நிறத்தில் மாறியிருக்கிறது. இதனை ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள் அதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வெளியிட சமூக வலை தளங்களில் இவை வைரலானது. ஆனால், அதன்பிறகு நடைபெற்ற சம்பவம் தான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பச்சை வானம்

அமெரிக்காவின் டகோட்டா மாகாணத்தில் தான் இந்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. வானம் பச்சை நிறத்தில் மாறிய உடனேயே பலரும் ஆச்சர்யப்பட்டு உள்ளனர். ஆனால், அது அதிவேக புயலுக்கான அறிகுறி என்பது அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. வானம் பச்சை நிறத்தில் மாறிய கொஞ்ச நேரத்திலேயே புயல் காற்று வீசியிருக்கிறது. அதுவும் மணிக்கு 90 கிலோமீட்டருக்கு அதிகமான வேகத்தில்.

இந்த புயலுக்கு டிராக்கோ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனால் டகோட்டா மட்டுமல்லாது நெப்ராஸ்கா பகுதியிலும் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூக்கியுள்ளன. புயல் காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

எச்சரிக்கை

மாலை நேர சூரிய கதிர்களில் வளிமண்டத்தில் உள்ள நீர் துளிகள் மற்றும் அதிக அளவிலான பனிக்கட்டிகள் பட்டு எதிரொலிப்பதால் பச்சை வண்ணம் உருவாகலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதுகுறித்து பேசிய அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையமான NWS யை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கோரி மார்ட்டின்,"மாலை வெயிலின் சிவப்பு நிற கதிர்கள், புயல் மேகங்கள் மீது படும்போது இவை உருவாகின்றன. குறிப்பாக அந்த மேகங்களில் நீர் மற்றும் பனியின் அளவு அதிகமாக இருக்கும்போது இவ்வாறான பச்சை நிறம் தோன்றுகிறது" என்றார்.

இந்நிலையில், இந்த விசித்திர நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | Breaking: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மரணம்.. "வார்த்தைகளில் விவரிக்க முடியாத சோகம்".. பிரதமர் மோடி உருக்கம்..!

 

SOUTH DAKOTA, GREEN SKY, US, SOUTH DAKOTA GREEN SKY SPECTACLE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்