‘திடீரென அதிகரித்த கொரோனா பரவல்’... ‘6 நாட்கள் மட்டும்’... ‘மீண்டும் கடுமையான முழு ஊரடங்கு பிறப்பித்த நாடு’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம், 6 நாட்கள் கடுமையான முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா கட்டுப்படுவதற்கான அறிகுறிகள் இல்லாததாலும், பொருளாதார சிக்கள் பெருகியதாலும் இந்தியா உள்பட பல நாடுகளிலும் பொதுமுடக்கம் சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் திடீரென பெருகியுள்ளதால் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், நாயுடன் நடைப்பயணம் போவது, வீட்டுக்கு வெளியே உடற்பயிற்சி செய்வது உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில்தான் இந்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவர் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வர முடியும்.

பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கஃபேக்கள், உணவகங்கள் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகள், இறுதி ஊர்வலங்களுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

அடிலெய்டு நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடமிருந்து அந்த பகுதியில் கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக சந்தேகிப்பதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை முதல் 22 நோயாளிகள் கண்டறியப்பட்டதால் அதை கொரோனா கிளஸ்டர் என்று அறிவித்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளது மாகாண நிர்வாகம். திருமணங்கள் மற்றும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம் தடைசெய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்