பல கணவர்களை திருமணம் செய்ய... பெண்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டம்!.. சரியா?.. தவறா?.. சர்ச்சையான விவகாரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் பாலிண்ட்ரி சட்டம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்கா ஏற்கனவே உலகின் மிகவும் தாராளவாத அரசியலமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இங்கு ஒரே பாலின திருமணங்களையும், ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாலின உரிமை ஆர்வலர்கள், பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களைக் வைத்துக்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி அளிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். இது சட்டப்பூர்வமாக்கப்படுவது குறித்து உள்துறை பாலிண்ட்ரி திட்டத்தை முன்மொழிந்து உள்ளது. இதனால் நாட்டின் பழமைவாதிகள் மற்றும் சில மதக் குழுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பாலிண்ட்ரி திட்டம், தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மூசா மெசெலு, பிபிசி செய்தி நிறுவனத்திடம் கூறும் போது, "இது ஆப்பிரிக்க கலாச்சாரத்தை அழித்துவிடும். அந்த மக்களின் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு? அவர்கள் அடையாளத்தை எப்படி அறிந்து கொள்வார்கள்? பெண் எப்போதும் ஆணின் ஆளுமையை எடுக்க முடியாது" எனக் கூறினார்.
ஆப்பிரிக்க கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரெவரெண்ட் கென்னத் மெஷோ பேசுகையில், "பலதார மணம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. ஆனால் ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. பல கணவர்களுடன் ஒரு பெண் இருக்க முடியாது, ஏனெனில், ஆண்கள் பொறாமை மற்றும் ஆதிக்க சக்தி உடையவர்கள்" எனக் கூறினார்.
இஸ்லாமிய அல்-ஜமா கட்சியின் தலைவர் கனீப் ஹென்ட்ரிக்ஸ் கூறியதாவது, "ஒரு குழந்தை பிறக்கும்போது நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள் தந்தை யார் என்பதைக் கண்டறிய அதிக டி.என்.ஏ சோதனைகள் தேவைப்படும்" எனத் தெரிவித்தார்.
ஒரு பெண் பல கணவர்களை வைத்துக்கொள்ளும் பாலிண்ட்ரி சட்டம் குறித்து ஆய்வுகள் நடத்திய கல்வியாளர், பேராசிரியர் கொலிஸ் மச்சோகோ பிபிசியிடம் கூறும் போது, "ஆப்பிரிக்க சமூகங்கள் உண்மையான சமத்துவத்திற்கு தயாராக இல்லை. எங்களால் கட்டுப்படுத்த முடியாத பெண்களை என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியாது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாடி நல்ல 'ஃபிட்டா' இருக்கணும்...' 'ஒரு நல்ல பிஸ்னஸ், ஒரு பங்களா...' வயசு 'இதுக்குள்ள' தான் இருக்கணும்...! 'வைரலான மணமகன் தேவை விளம்பரம்...' - கடைசியில் தெரிய வந்த அதிரடி டிவிஸ்ட்...!
- ஹாய்...! 'லண்டன்ல இருந்து தான் பேசுறேன்...' நாம ஒரு தடவ 'மீட்' பண்ணிருவோமா...? வந்துட்டேன்னு, ஏர்போர்ட்ல இருந்து வந்த போன்கால்...' - பக்காவா பிளான் பண்ணி நடந்த மோசடி...!
- 'என்ன மாப்ள, யாரு பொண்ணுன்னு கண்டுபுடிங்க பாப்போம்'... 'கல்யாண வீடுன்னா இப்படில இருக்கணும்'... வைரலாகும் செம கலாய் வீடியோ!
- 'ஒரே பிரசவத்தில்... 10 குழந்தைகள்' பெற்றெடுத்ததாகக் கூறிய பெண் கைது!.. பூதாகரமான விவகாரம்!.. மெல்ல அவிழும் மர்ம முடிச்சுகள்!
- 'எல்லாத்துக்கும் காரணம்...' 'டிரஸ் கம்மியா போடுறது தான்...' 'பாகிஸ்தான் பிரதமர் கூறிய சர்ச்சை கருத்து...' - வலுக்கும் கண்டனங்கள்...!
- 'என்ன வார்த்த சொல்லிட்ட மா'... 'மணமகள் வாய் தவறி சொன்ன வார்த்தை'... 'விழுந்து விழுந்து சிரித்த சொந்தக்காரர்கள்'... வைரலாகும் வீடியோ!
- யப்பா...! ரெண்டு பேரையுமே 'லவ்' பண்ணியிருக்க...! இப்போ 'என்ன' பண்ண போறதா உத்தேசம்...? ஒண்ணும் 'பிரச்சனை' இல்ல, நான் 'முடிவு' பண்ணிட்டேன்...! - 'மாஸ்' காட்டிய 90's கிட்...!
- டிவியில வந்த 'ஒரு' காட்சி...! 'சொந்த மனைவியை 'மீண்டும்' திருமணம் செய்த கணவன்...' - நெஞ்சை உருக செய்யும் காரணம்...!
- 'தாலி கட்டிட்டு வர்றதுக்குள்ள...' 'போட்ட பிளானை பக்காவா முடிச்சிடலாம்...' யாரு இத பண்ணியிருப்பா...? - கடைசியில தெரியவந்த 'அதிர' வைக்கும் ட்விஸ்ட்...!
- என்னங்க சொல்றீங்க...? 'பேரக்குழந்தைகளே மொத்தம் 126 பேர் இருக்காங்க...' - 90'ஸ் கிட்ஸ்-க்கு 'இடி' விழுற மாதிரி ஒரு செய்தி...!