'ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓமிக்ரானைக் கண்டு அச்சப்படும் நிலையில்...' - WHO விஞ்ஞானி வெளியிட்ட முக்கிய தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஓமிக்ரானை சமீபத்தில் தான் கண்டுபிடித்துள்ளோம், அதற்குள்ளாக உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வகை வைரஸ் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாது என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன மாநாடு ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் ஓமிக்ரான் வைரஸ் குறித்து கூறுகையில்,
ஓமிக்ரான் தீவிரமான வகையாக மாறுமா என்று இப்போதே சொல்ல முடியாது. மிகவும் பரவக்கூடியதாக உள்ளது என்பது உண்மை. தென் ஆப்ரிக்காவில் தினசரி பாதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த வைரஸை நாம் எதிர்கொள்ள தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் பயப்படாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
உலக அளவில் 99 சதவீத நோய்த்தொற்றுக்கு டெல்டா வகை வைரஸ் தான் காரணம். இந்த உருமாறிய வைரசும் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனாலும் தற்போது உறுதியாக கணித்து சொல்ல முடியாது. நாம் சிறிது காலம் காத்திருந்து தான் முடிவுக்கு வரவேண்டும் என கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- உலகமே 'ஓமிக்ரான' நினைச்சு 'ஃபீல்' பண்ணிட்டு இருந்தப்போ... 'மனசு குளிருற மாதிரி வந்துள்ள கிரேட் நியூஸ்...' - தென் ஆப்பிரிக்க மருத்துவர் சொன்ன தகவல்...!
- “இது ஆரம்ப நிலை தான்”!.. ஓமிக்ரான் பற்றி முதன்முதலாக எச்சரித்த மருத்துவர் சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- இந்தியாவிற்குள் வந்த ஓமிக்ரான்.. அறிகுறி உள்பட தெரிய வேண்டிய 10 உண்மைகள்
- அது ஒண்ணும் 'பாப்கார்ன்' இல்லங்க...! 'ஓமிக்ரான் வைரஸ்...' - பிசிசிஐ-ஐ எச்சரித்த அமைச்சர்...!
- அச்சுறுத்தும் ‘ஓமிக்ரான்’ வைரஸ்.. சவுரவ் கங்குலி சொன்ன ‘முக்கிய’ தகவல்..!
- 'ஓமிக்ரான்' வைரஸ ஃபேஸ் பண்றதுக்கு 'அது' மட்டும் தான் 'ஒரே வழி', இல்லன்னா...' - ஃபேமஸ் வைராலஜிஸ்ட் 'முக்கிய' தகவல்...!
- எங்க தடுப்பூசி 'ஓமிக்ரான்' வைரஸ் கூட 'நின்னு' மோதும்...! - 'தடுப்பூசி' நிறுவன அதிகாரி தகவல்...!
- இதை பண்றதால மட்டும் ‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுத்திட முடியாது.. உலக சுகாதார அமைப்பு கொடுத்த எச்சரிக்கை..!
- 'ஒமிக்ரான்' வைரஸ 'எங்க தடுப்பூசி' சும்மா கதற விட்ரும்...! - கெத்து காட்டும் நாடு...!
- 'கோவாக்சின்' போட்டவங்க 'பட்டாசு' வெடிச்சு கொண்டாடுங்க...! இந்த 'ஹேப்பி நியூஸ்'காக தானே இத்தனை நாளா காத்திருந்தோம்...! - அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்...!